எங்கே உங்களால் முடிந்தால் கண்டு படியுங்கள் பார்க்கலாம்

☆ஒருவர் வீட்டில் இருந்து கோயிலுக்கு செல்கிறார். செல்லும் போது கொஞ்ச பூக்களை கோயிலுக்காக கொண்டு செல்கிறார்.
ஆனால் அடுத்தடுத்து மூன்று கோயில்கள் உள்ளன.
☆அவர் மூன்று கோயில்களுக்கும் செல்ல வேண்டும்.மூன்று கோயில்களுக்கு முன் பகுதியிலும் மூன்று குளங்கள் உள்ளன.
☆அவர் கொண்டு வந்த பூக்களை கோயில்களுக்கு முன் பக்கத்தில் உள்ள குளங்களில் கட்டாயம் கழுவ வேண்டும்.
☆அவ்வாறு கழுவினால் அப்பூக்கள் இருமடங்காகும்.
☆அவ்வாறு சென்று முதல் குளத்தில் கழுவ வேண்டும்.அப்பூக்கள் இருமடங்காகும்.அதிலே ஒரு தொகை பூக்களை அக்கோயிலுக்கு வைக்க வேண்டும்.
☆அவ்வாறு வைத்த பின்னர் எஞ்சியுள்ள பூக்களை அடுத்த கோவிலுக்கு சென்று அங்கு உள்ள குளத்தில் கழுவி இரண்டாவது கோயிலுக்கும் பூக்களை வைக்க வேண்டும்.
பின்னர் மூன்றாவது கோயிலுக்கும் சென்று அவ்வாறே குளத்தில் கழுவி மூன்றாவது கோயிலுக்கும் வைத்து விட வேண்டும்.ஆனால் பூக்கள் எஞ்சியிருக்க கூடாது.
☆அவரும் அவ்வாறு செய்து மூன்று கோயில்களிலுக்கும் பூக்களை சமமாக வைத்து விட்டு எந்த பூக்களும் எஞ்சாமல் வீடு செல்கிறார்.

●இப்போது கேள்விக்கு வருவோம்.
01)அவர் எத்தனை பூக்களை வீட்டில் இருந்து கோயிலுக்கு கொண்டு வந்தார்?
02)ஒவ்வொரு கோயில்களுக்கும் எத்தனை பூக்களை வைத்தார்.?



நாள் : 30-Sep-16, 1:13 am
0


மேலே