எங்கள் ஐயன் வள்ளுவனே போற்றி

எங்கள் ஐயன் வள்ளுவனே போற்றி | கேள்வி பதில்கள் | Eluthu.com

உலகத்துக்கே ஒரு பொதுவான நூலென எழுதப்பட்ட “உலகப் பொதுமறை” என்கிற திருக்குறளுக்கு இன்று வரை ஈடான ஒன்று இதுவரை இயற்றப் படவில்லை என்பதுதான் உண்மை.

அந்தப் பெருமையும் நம் தமிழ்நாட்டுக்கே சாரும். மஹாகவி பாடிய “வள்ளுவன் தனை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” இதற்குச் சான்றாக அமையும்.

இப்படிப்பட்ட ஒரு தெய்வப் பிறவியைப் பற்றிய வரலாறு பற்றி பலவாறு பகிரப்படுகிறது என்று டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு முறை ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, அரசாங்கம் பயன்படுத்துகின்ற அவரது ஓவியமும் தீட்டப்பட்டதுதான்.

அவரது பிறப்பு, வளர்ப்பு பற்றிய உண்மை மு.வ அவர்கள் அறிந்திருந்தால், அவரே அதை ஒரு நூலாக எழுதியிருப்பார்கள். வள்ளுவர் போலவே, உலகுக்கு பயன் தரக்கூடிய, முக்கியமாக இன்றய இளைஞர்கள் படிக்கவேண்டிய பல அற்புதமான நூல்களை டாக்டர் மு.வ உலகுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

அவருக்குப் பிறகு யாராவது இம்முயற்ச்சியில் இறங்கியிருக்கிறார்களா?..

இப்போது உலவிக்கொண்டிருக்கும் ஒரு சில வள்ளுவர் வரலாறு என்பது ஒரு “புனைந்துரை” தான் என்றும் மு.வ அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இதுபற்றிய, மேலான சிந்தனையையும் தெரிவிக்கலாம்?...


பதில் அளி
0 கேட்டவர் : பெருவை பார்த்தசாரதி , 2-Mar-17, 7:43 pm
Close (X)


மேலே