
காதல் கவிதைகளிலும் காவியங்களிலும் கதைகளிலும் நாவல்களிலும்
மிகைப் படுத்தப்பட்ட ஓர் உணர்வு .
1 . யதார்த்த வாழ்க்கைக்கு இது தேவையா ?
2 . யதார்த்தவாதிகள் காதலை பொருட்டாக நினைப்பதில்லை .
உங்கள் நிலை என்ன ?
3 . காதலித்து திருமணம் புரிபவர்கள் பலர் மணமுறிவு கோர்ட்டில் போய்
நிற்கிறார்கள் .
காதல் அர்த்தமற்றதா அல்லது திருமணம் அர்த்தமற்றதா அல்லது இரண்டுமே
அர்த்தமற்றதா ?
4 .தாய் தந்தையரின் விருப்பத்திற்கு மாறாக விரும்பியவரை மணப்பது
பாசத்திற்கு துரோகமா காதலுக்கு நியாயமா ?
5 . காதல் நிறைவேறாதவர்கள் சிலர் அதீத உணர்வினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் .
இவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ?
6 . பதின் வயதினில் உடலியல் கூறுபாட்டில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் மனம் உடல் சார்ந்த மெல்லிய உணர்வு.
எழுதுகிறவர்கள் இதை காதல் என்று மிகைப் படுத்தினார்கள். இது பாலியல் உணர்வு என்பது மனோவியல்
கோணம் . எது சரி ?
காதல் மனப்பொழில் மலரா
உடலியல் மெல் உணர்வா
கவிஞர்தம் கற்பனை இலவம் பஞ்சா ?
காதல் யாதெனக் கேட்டேன் !
---கவின் சாரலன்