சிறந்த கவிதைகள், கவிஞர்களுக்கான அங்கீகாரம் என்பது இங்கு எது?

1)சிறந்த கவிதைகளை கவிஞர்களை எப்படி அடையாளம் காண்பது.. ?
2)சிறந்தவை பட்டியலில் இடம் பெரும் அனைத்தும் சிறந்த கவிதையாக இருக்கிறதா.. ?
3)தேர்வு பட்டியலில் உள்ள அனைத்தும் உண்மையாகவும் நேர்மையாகவும் வாசகர்களால் தேர்வு
செய்ய பட்டவைதானா..?
4)நல்ல பல கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் அங்கீகாரம் இல்லாமல் போவது ஏன்..?
5) பிறர் கவிதைக்கு கருத்தும் மதிப்பெண்ணும் வழங்கினால் மட்டுமே நம் கவிதைக்கும் அது கிடைக்குமென்றால் அதிகமான கருத்தும் மதிப்பெண்களும் இடுபவரின் கவிதைகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்குமா..?
6) இவ்வாறான சூழ்நிலையில் புதிதாக நுழையும் ஒரு வாசகர் எப்படி சிறந்த கவிதைகளை வாசிக்க முடியும்.. ?
7) எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காக எண்ணியதை எல்லாம் எழுதுவது சரியா..?
8) நட்பு வட்டம் கொண்டு சிலர் சில குழுக்களாக பிரிந்து அவர்களுக்குள் மதிப்பெண் போட்டு கொள்வது முறையா.. ?
9) பரிசு பெற்றவர்கள், அதிக கவிதை சமர்பித்தவர்கள் மட்டுமே சிறந்த படைப்பாளிகளா...?மற்றவர்கள்...?
10) கருத்து கூற சுதந்திரம் இங்கு அனைவருக்கும் அனைத்து கவிதைக்கும் உண்டு எனில் முறையற்ற மன உளைச்சலை உண்டாக்கும் வார்த்தைகளை கூறுவது மட்டும் சரியாகுமா..?



கேட்டவர் : ஆவாரம் பூ
நாள் : 5-May-13, 9:55 pm
0


மேலே