என்னுடைய பெண் நண்பர் , அவள் கடந்த 3 வருடமாக காதலித்து வருகிராள்,அவள் ஒரு தனியார் கம்பெனியில் HR ஆக பணிபுரிகிறாள்,அவள் காதலிக்கும் நபரும் நல்ல சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார், இருவரும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள் (பெண் பிராமின் - அந்த நபர் - வன்னியர்) இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் தெரிந்து விட்டது . இதில் ஆண் தரப்பில் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்,ஆனால் பெண் விட்டார் தரப்பில் காதலை ஏற்க மறுக்கிறார்கள் பிரிவை காரணம் காட்டி, என் நண்பருக்கு அவர் அம்மாவின் சம்மதம் இல்லாமல் இவருடன் திருமணம் செய்ய விருப்பமில்லை இவரை பிரிந்து வாழவும் மனமில்லை, இதில் அவர் காதலிக்கும் நபருக்கு வயது 32 இருக்கும் இதை காரணம் காட்டி ஆண் வீட்டாரும் மகனை திருமணம் செய்ய சொல்லி கட்டாயபடுத்துகின்றனர், இதில் என் பெண் நண்பர் அவரின் அம்மாவை சமாதானம் செய்ய முடியாமலும் இவரை பிரியமுடியாமலும் தீராத மன உளைச்சலில் உள்ளார் எண்ண செய்வதென்று தெரியாமல். நல்ல தீர்வு சொல்லுங்கள் நண்பர்களே.நன்றி