திருமணத்திற்கு முன்பே ஒரு ஆண் வேறொரு பெண்ணுடன் திருமண உறவுகொண்டு அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றது .இருந்தும் அந்த விஷயத்தை மறைத்து அந்த ஆணுக்கு இன்னொரு திருமணம் நடக்கிறது .அது தெரிந்த அந்த இரண்டாவது மனைவி பிரசவத்திற்கு சென்ற தாய் வீட்டோடு பிறந்த பெண் குழந்தையோடு ஆறுதல் தேடி வந்துவிடுகிறாள் . அங்கு தன் தங்கை அவளுக்கு நல்ல ஆறுதல் தந்து அவளுக்கும் அறுதல் சொல்லி வேலை வாங்கித்தந்து அவளையும் அவளது மகளையும் பொறுப்போடு காத்துவருகிறாள் . இந்தநிலையில் தங்கை ஸ்தானத்தில் இருக்கும் அந்த பெண்ணிற்கும் திருமணம் ஆகி அவருடைய கணவரும் அந்த குழந்தையும் அந்த குடும்பத்தையும் பாசத்தோடு வளர்த்துவருகிறார்கள் . இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தாலும் அந்த பெண்ணிற்கு தந்தை சரியில்லை என்கிற காரணத்தாலும் பெற்ற தந்தையின் கவலை அறியாத அளவிற்கு முடிந்த உதவிகளை பணமாகவும் கல்விக்கு தேவையான செலவுகலாகவும் தன்னுடனே 12 ஆண்டுகள் வளர்த்து வந்தார்கள் . தனக்கு ஒரு பிள்ளை இல்லை என்பதை இந்த பெண் இருப்பதால் அவர்களுக்கு புரியாமலேயே இருந்தது . தாங்கள் கஷ்டப்படும் நேரத்தில் கூட அந்த பெண்ணிற்கு நல்ல முறையில் திருமணம் செய்து அந்த பெண்ணின் அப்பனை காட்டிலும் சிறப்பாக செய்யவேண்டும் என்கிற கனவில் இருந்தார்கள் . மொத்தத்தில் அந்த பெண்ணே இவர்களின் உலகம் . அவள் இல்லாத ஒருநாளும் இல்லை . இந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் வெளியூரில் வாழ்க்கை நடத்திவந்த வளர்ப்புமகளின் தந்தை சொந்த ஊரோடு வந்து அந்த வப்பாட்டி பெண்ணுடனே வாழ்க்கை நடத்துகையிலும் அந்த பெண்ணுடைய அக்காவும் அவர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு பெண்ணும் இவர்களை அலட்சியம் செய்துவிட்டு அவர்கள் இருவரும் தன கணவரோடு போய் சேர்ந்துவிட்டார்கள் . கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வளர்த்துவந்த மகளுடைய பிரிவை அவர்களால் ஏற்றுக்கொள்ள் முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி நிம்மதியாக சாப்பிடவும் நிம்மதியாக உறங்கவும் முடியாமல் தவித்து மனமுடைந்து போய் இருக்கிறார்கள் . அவளை மறக்க நினைத்து தோற்றுப்போய் அவள் இருந்த இடம் செய்த செயல்கள் ஆகியவற்றை நினைத்து நினைத்து வருந்தி வருகிறார்கள் . தனக்கு குழந்தை இல்லாத நிலையிலும் அந்தபென்னையே தன மகளாக நினைத்து குழந்தையை தத்தெடுக்கும் முயற்ச்சியை கூட கைவிட்டு இருக்கிறார்கள் . இந்த நிலையில் அந்த பெண் தன தந்தையை தேடி செல்லும் வேளையில் சில தவறான வார்த்தைகளையும் உதிர்த்துவிட்டு போய் இருக்கிறார்கள் அந்த வளர்ப்பு மகள் . இந்த நிலையில் அந்த பெண் கேட்டு சென்ற வார்த்தையும் அவளது பிரிவும் சொல்லென இயலாத துயரத்தில் இவர்களை ஆழ்த்தி உள்ளது .நமக்கொரு குழந்தை பிறந்தால் இந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிடும் என்று தனக்கு குழந்தை இல்லாத நிலையிலும் அதிகமாக அக்கறை எடுத்து கொள்ளாமல் அந்த பெண்ணை தன மகளாக நினைத்து வாழ்ந்த இவர்கள் இன்று ஏமாந்து போய் விட்டார்கள்.
இன்று இவர்கள் வாழ்க்கைதான் கேள்விக்குறி . . நண்பர்களே உங்களுடையே உண்மையான ஆறுதலாக பதிலை கேட்கிறேன் . இந்த விஷயத்தில் பெற்ற பாசம் பெரிதா , வளர்த்த பாசம் பெரிதா ?