பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் இலங்கை பாதுகாப்பு அமைச்சு பகிரங்க மன்னிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரையை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கிக் கொண்டதுடன், பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. 

ஜெயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்களால் எதனை சாதிக்கமுடியும் என்ற தலைப்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

இது குறித்து இந்திய தரப்பு ஆட்சேபனை வெளியிட்டமையை அடுத்து அதனை இணையத்தளத்தில் இருந்து அகற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, எவ்வித அதிகாரத்துவ அனுமதியும் இன்றி இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டதாகவும் அது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கட்டுரை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. தனது மன்னிப்புக் கடிதத்தினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்டது.

இதற்காக ஜெயலலிதாவிடமும் மோடியிடமும் பகிரங்க மன்னிப்பு கோருவதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,  இலங்கையின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் இலங்கை பாதுகாப்பு அமைச்சு பகிரங்க மன்னிப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரையை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கிக் கொண்டதுடன், பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. ஜெயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்களால் எதனை சாதிக்கமுடியும் என்ற தலைப்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இது குறித்து இந்திய தரப்பு ஆட்சேபனை வெளியிட்டமையை அடுத்து அதனை இணையத்தளத்தில் இருந்து அகற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, எவ்வித அதிகாரத்துவ அனுமதியும் இன்றி இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டதாகவும் அது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கட்டுரை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. தனது மன்னிப்புக் கடிதத்தினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்டது. இதற்காக ஜெயலலிதாவிடமும் மோடியிடமும் பகிரங்க மன்னிப்பு கோருவதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கையின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும்.

Close (X)


மேலே