மாவீரர்கள்.. தாய் மடியில் பூவாய் மலர்ந்து தாய் மண்ணில் படம்
மாவீரர்கள்.. தாய் மடியில் பூவாய் மலர்ந்து தாய் மண்ணில் விதையாய் வீழ்ந்தவர்களே... தாய் மண்ணின் விடிவிற்காய் தம் உயிரை துறந்த செல்வங்களே... கல்லறை மீதினில் பூக்களை சொரிகையில் உம் முகம் பார்த்தோம் கல்லறை முன்பு தீப்பந்தம் ஏற்றுகையில் உம் இலட்சியம் கண்டோம் உங்கள் பாடல் இசைக்கையில் எங்கள் இலக்கு உணர்ந்தோம் இன்று எம் தெய்வங்கள் கல்லறை தேடி எங்கே போவோம் நினைவுச் சின்னங்களை அழித்தாலும் அழியாத உங்கள் நினைவுகளோடு நாம் .....மாவீரர் சுமந்த கனவுகளை இன்று .....