m.thamotharan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  m.thamotharan
இடம்:  ஆவரைகுளம்.திருநெல்வேலி
பிறந்த தேதி :  31-Dec-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2010
பார்த்தவர்கள்:  170
புள்ளி:  48

என்னைப் பற்றி...

மனதில் பட்டவை மனதை தொட்டவை வார்த்தைகளாய் வடிவெடுக்கும் போது எழுத்துரு பெறுகின்றன. அரசு அதிகாரிகள் எல்லோரையும் போல் எல்லாவற்றையும் எழுதிட முடியாது..நம்மை உருகவைப்பதும் உருவாக வைப்பதுமான காதல் மீது காதல் இல்லாதவர் இல்லை.
.எனவே காதல் வட்டத்திற்குள் நின்றுகொள்ளவிரும்பினேன் ஆனால் காதல் வட்டம் மொழி இனம் சாதி சமயம் தேசம் மனித
உயிர்களையும் கடந்து முடிவில்லாத வட்டமாக நீண்டு கிடக்கிறது.தேசம் மொழி இனம் சாதி மதம் இவையெல்லாம் வெறுப்பை கசப்பை உருவாக்குகின்றன.காதல் வாய்த்திருந்தாலும் ஏய்த்திருந்தாலும் அன்பும் அக்கறையும் கொண்ட அந்த அற்புத உணர்வை எல்லா உயிர்களிடமும் மனிதர்களிடமும் காட்டுங்கள் .உண்மை காதலில் துன்பங்கள் வரலாம்.ஆனால் யாரையும் துன்புறுத்துவதில்லை.களவையும் கற்போடு பார்த்த காலஙகள் மாறிவருகின்றன.ஆனாலும்காதலோடு மேற்கொள்ளப்படும் பணிகள் எளிமையாகவும் இனிமையாகவும் அமையும்.காதல் சார்ந்த இரு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன்.“காதல் இணையும் தளம் காத்திரு“ “தலையணைப் பூக்கள்“.எங்கிருந்து வந்தோம் எங்கே செல்கிறோம் என்பது தெரியாது.எதையும் அடையாளபடுத்தவும் முடியாது.உலகில் அடையாளங்களே அடையாளமற்று போகின்றன.மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற வள்ளுவனுக்கு நாம் கொடுத்த அடையாளம் நீண்ட தாடி ஜடாமுடி் எதுவும் இங்கு நீடிப்பதில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே வேறொன்றுமில்லை.எதை கொடுக்கிறமோ அதையே பெறுகிறோம்.அன்பையும் மகிழ்ச்சியையும் அள்ளி வழங்க அவையே திரும்ப வரும்.வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மதுக்கிண்ணத்தின் கடைசி மிடறு போன்று ரசனைக்குரியவை.அவை கோபங்களால் பொறாமைகளால் பேராசைகளால் மத இன தேச துவேசங்களால் வீணடிக்கப்படுகின்றன.பல நேரங்களில் நல்ல கருத்துகளையும் உபதேசங்களையும் கூறுபவர்களை நல்லவர்களாக நினைத்து கேட்பவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள் ஏமாற்றப்படுவதற்கும் இடம் கொடுத்து விடுகிறார்கள்.

உபதேசங்கள் பல உபதேசிப்பவர்களால் கடைபிடிக்கமுடியாது போய் பொய்யாகி விடுகிறது..கவிதைக்கு பொய் அழகாகயிருக்கலாம்.ஆனால் உண்மை உணர்வுகளே கவிதையை உயிரோட்டமாக வைத்திருக்கும்

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே