கவிஞர் அஸ்மின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர் அஸ்மின்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  02-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2011
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  21

என்னைப் பற்றி...

இலங்கையின் கிழக்கு மாகாணம் பொத்துவிலைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும்,திரைப்பட பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)எனும் மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.''ரத்தம் இல்லாத யுத்தம்''(கவிதை),''ஈழநிலாவின் உணர்வுகள்''(பத்தி எழுத்து) ஆகிய நூல்கள் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன. சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ''ஜனாதிபதி விருது''(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் ''தங்கப் பதக்கம்'' (2003) உட்பட எட்டு விருதுகளை பெற்றுள்ளார். அண்மையில் 'வியர்வையின் ஓவியம்'-2010 கலை நிகழ்வில்; சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. பேசாத கண்ணும் பேசுமே, காதல் டொட் கொம், கோடம்பாக்கம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த கே.செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே