கவிஞர் அஸ்மின்- கருத்துகள்

"நான்" படம் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தும் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி,படத்தின் இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். அதற்காக இந்தப் படத்தில் புதுமுக கவிஞர் ஒருவரை அறிமுகப்படுத்த விரும்பியவர் பாடல்களுக்கான மெட்டை தன் இணையத்தளத்தில் கொடுத்திருந்தார்.

மெட்டுக்கு பொருத்தமான பாடல் எழுதும் கவிஞரின் பாடல், 'நான்" படத்தில் இடம் பெறும் என்றும் அறிவித்திருந்தார். இதற்குப்பிறகு தான் சொன்னது தப்பா… தப்பா… என்று யோசிக்க ஆரம்பித்தார்.

உலகம் முழுக்க இருந்து பாடல்கள் குவிந்தன. பார்த்ததும் திக்குமுக்காடிப் போனவர், ஒருவழியாக ரிலாக்ஸ் ஆகி, மெட்டுக்கு பொருத்தமான பாடலை தேர்ந்தெடுத்தே விட்டார். அந்தப் பாடலை எழுதியவர் ஈழத்துக்கவிஞர் பொத்துவில் அஸ்மின்.அவரை தன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தி கௌரவிக்க இருக்கிறார்.

பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் விரைவில் நடைபெறவுள்ளது. இதனை கவிஞர் அஸ்மின் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். __


கவிஞர் அஸ்மின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே