சுசத்தியபிரபாகர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சுசத்தியபிரபாகர்
இடம்:  கடற்கரைச்சேனை
பிறந்த தேதி :  06-Sep-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2021
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  2

என் படைப்புகள்
சுசத்தியபிரபாகர் செய்திகள்
சுசத்தியபிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2021 1:15 pm

வசந்த கால பனி போர்த்த
மெல்லிய பின்னிரவொன்றின்
தூக்கம் கலைத்து
அடங்கிப்போகிறது ஆட்காட்டியின் குரல்

சாளர இடுக்கின் வழியே
துப்பாக்கி கைகள் முகத்தில்
அடித்த மின் சூழின்
துயர வெளிச்சத்தில்
எஞ்சிய இரவு
ஒளிந்து கொள்கிறது.

நிலை அதிரத் தட்டும் சீருடை
கதவின் பின்னால் இரவை பற்றவைக்க சொல்லும் தருணத்தில்
உரசிய தீக்குச்சொன்று
குப்பி விளக்கை உயிர்ப்பிக்க
பயங்கள் மட்டுமே துணை இருக்க
கத்தியும் ஆண்மையும்
தங்களை கூர் பார்து நிமிர்த போது
இரத்த வேள்வியில்
உருக்குலைந்து கிடந்தது
தளிர் விட்ட
தலைமுறை ஒன்று.

வேள்வி முடிந்து
வீட்டுக்கு வைத்த தீ
தோற்றுப்போன விடியலுக்குள்
எரிந்து கொண

மேலும்

சுசத்தியபிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2021 12:53 pm

நகரங்களை பூட்டி
நரகத்தை திறந்து விட்டதொரு
பெரும் தொற்று நாளில்
பொதி சுமந்து
வயிர் நிறைத்த குடும்பம் ஒன்று.
பசி துரத்த பயணிக்குறது
தன் கூடுதேடி.

அத்தனை வாகன நெரிசலிலும்
பேரூந்தின் யன்னல் கம்பியின் ஊடே
தெருவோர கடையில் அடுக்கி இருந்த
மிட்டாயில் மொய்த்து திரும்பும் தருணத்தில் தேங்கி கிடக்குறது குழந்தையின்
கண்களில் இனிப்பின் சுவை.

வலி சுமந்த வாழ்வின்
மிச்சங்களை நிரப்ப முடியாத
ஆற்றாமையிலும் பணப்பையில்
எஞ்சி கிடக்குறது
ஒரு துண்டு நம்பிக்கை.

நெரிசலில் விலகி பிரிந்து
மலை ஏற தொடங்குகிறது
பேரூந்து
ஒரு கோப்பை தேனீரும்
ஒரு சர்க்கரை துண்டும்
நாளைய விடியலை
இனிப்பாக்கும் என்

மேலும்

கருத்துகள்

மேலே