பெரும் தொற்று

நகரங்களை பூட்டி
நரகத்தை திறந்து விட்டதொரு
பெரும் தொற்று நாளில்
பொதி சுமந்து
வயிர் நிறைத்த குடும்பம் ஒன்று.
பசி துரத்த பயணிக்குறது
தன் கூடுதேடி.

அத்தனை வாகன நெரிசலிலும்
பேரூந்தின் யன்னல் கம்பியின் ஊடே
தெருவோர கடையில் அடுக்கி இருந்த
மிட்டாயில் மொய்த்து திரும்பும் தருணத்தில் தேங்கி கிடக்குறது குழந்தையின்
கண்களில் இனிப்பின் சுவை.

வலி சுமந்த வாழ்வின்
மிச்சங்களை நிரப்ப முடியாத
ஆற்றாமையிலும் பணப்பையில்
எஞ்சி கிடக்குறது
ஒரு துண்டு நம்பிக்கை.

நெரிசலில் விலகி பிரிந்து
மலை ஏற தொடங்குகிறது
பேரூந்து
ஒரு கோப்பை தேனீரும்
ஒரு சர்க்கரை துண்டும்
நாளைய விடியலை
இனிப்பாக்கும் என்ற
நம்பிக்கையில்

எழுதியவர் : S.சத்தியபிரபாகர் (7-Dec-21, 12:53 pm)
சேர்த்தது : சுசத்தியபிரபாகர்
பார்வை : 48

மேலே