குறை கூறத் தோனலையோ

கெட்ட பழக்கங்கள் என்று
தெரிந்திருந்தும்
தொட்டுவிட்டு தவிக்கும் மனம்,
தொலை பேசி, தொலைக் காட்சி
குடி பழக்கம், சிகரெட் போன்றவற்றால்
கோடி,கோடியாய் பணமிருந்தும்
குடும்பத்தையே நாசமாக்கும்

குடிப்பழக்கம், குடிப்பவரை தன்
கையில் வைத்துக் கொண்டு
ஆடவைத்து அடக்கி விடும்,
அநாதையாய் வீதியில் கிடத்தி
அசிங்கப்படுத்தும்
அவர் மானத்தை இழக்கவைத்து
நிம்மதியை பறித்துவிடும்

ஆண்களிடம் தஞ்சமடைந்து
அண்டிப் பிழைக்க வந்து
ஆறாவது விரலாட்டம்
ஆட்டம் போடும் சிகரெட்
புகையை கக்கி சாம்பலாகும்
முத்திரை பதிப்பதுபோல்
முடிவில் அவனையே கொல்லும்

கட்டுபடாத ஆசைகளால்
விட்டு விலக முடியாம
ஆடம்பர செலவுகளும்,
அநாவசிய பொருட்களை
வாங்கிக் குவிப்பதும்
வாடிக்கையாகிப் போனதால்
கெட்ட பழக்கங்கள் என
குறை கூறத் தோனலையோ !

எழுதியவர் : கோ. கணபதி. (7-Dec-21, 12:19 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 41

மேலே