ஜெ மோ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜெ மோ |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 4 |
தன் உலகத்தை என் மூலமாக கண்டவன்,
எறும்பாக உழைத்து, தேனீப் போல் சேமித்துக் கொண்டவன்,
கடன் என்பதையே வாழ்வில் பெறாதவன்..
தன் மகன் கடன் வாங்கும் போதெல்லாம்....
கண்ணீரில் நனைந்தவன்....
அது மட்டுமா....
தன் மகனை காதல் ஒதுக்கியபோது....
தோள் கொடுத்து தேற்றியவன்...
மகன் நொடிந்து குடிப்பதை அறிந்து...
என் தாயின் நெஞ்சத்தில் குமுறி.... குமுறி அழுதவன்....
“என் புள்ளைக்கு அவள விட அழகுலையும், அறிவிலையும்
உயர்தவளை கொண்டுவருவேன்” என்று கங்கணம் கட்டி
அதை செயல் படுத்திய கர்ம வீரன்....
தன் மகனை ஆனந்தம் படுத்துகிறவள் என்ற
ஒரே காரணத்திற்காக தன் மருமகளை
கடைசி வரை மகளாகவே பாவித்தவன்....
சென்னையில் கொரனா பரவும்
செய்திகளை கேட்க்கும் போதெல்லாம்
தவித்து நிற்கும் இந்த பறவைப் போல்
தவிக்க மட்டும் தான் முடிகிறது .....
குடும்பத்துடன் கொஞ்சம் ஊருக்குத்தான் போயேன்....
சொல்ல இயலா சில நெருடல்கள்
அதில் பொசுங்கி போகட்டும்....
நீ என்னவள் ...
எனக்கு மட்டுமே சொந்தம்.....
நீயில்லாமல் என் வாழ்வில்லை....
என்னைவிட வேறு யாராலும் உன்னை
அன்பாக பார்க்க முடியாது.....
இப்படி பல ஆண்டுகளுக்கு முன்னிறுந்த
என் ஆணவம் பிடித்த சிகப்பு காதல்
இன்று வெள்ளை காதல் ஆனதன் மர்மம்
பக்குவப் பட்ட நேசத்தால் மட்டுமே....
திருமதி என்னும் உன்னை
திரு என்னும் நான் இன்னும் நேசிப்பது என்பது
வேதங்களின் பாஷையில் நீச்ச செயல்...
மறையாத காதலை
மறைக்க நினைத்த பொழுதுகளும்,
மறக்க நினைத்த பொழுதுகளும்
இதோ இப்பொழுதைப் போல்,
எப்பொழுதும் நீட்சிக் கொண்டே போகும் ...
நீ தேடி பெற்றுக் கொண்ட வரவுமல்ல ...
உன் பிரிவென்பது என்னை வாட்டும் சாபமுமல்ல ...
ஞானத்தைப் பெற வேதங்கள் மட்டும் போதுமானதல்ல
இதுப் போன்ற காதலும், அதன்
பிரிவின் சுகமும் கூட போதுமானதாய் உள்ளது...