தந்தையின் நேசங்கள்
தன் உலகத்தை என் மூலமாக கண்டவன்,
எறும்பாக உழைத்து, தேனீப் போல் சேமித்துக் கொண்டவன்,
கடன் என்பதையே வாழ்வில் பெறாதவன்..
தன் மகன் கடன் வாங்கும் போதெல்லாம்....
கண்ணீரில் நனைந்தவன்....
அது மட்டுமா....
தன் மகனை காதல் ஒதுக்கியபோது....
தோள் கொடுத்து தேற்றியவன்...
மகன் நொடிந்து குடிப்பதை அறிந்து...
என் தாயின் நெஞ்சத்தில் குமுறி.... குமுறி அழுதவன்....
“என் புள்ளைக்கு அவள விட அழகுலையும், அறிவிலையும்
உயர்தவளை கொண்டுவருவேன்” என்று கங்கணம் கட்டி
அதை செயல் படுத்திய கர்ம வீரன்....
தன் மகனை ஆனந்தம் படுத்துகிறவள் என்ற
ஒரே காரணத்திற்காக தன் மருமகளை
கடைசி வரை மகளாகவே பாவித்தவன்....
“அப்பாவின் சொத்து மகனுக்கு” என்ற வழக்கத்தை மாற்றி
தன் முழு சொத்தையும் மருமகள் பெயரில் எழுதி
ஆரவாரமற்ற புரட்சி செய்தவன்....
நெஞ்சம் விம்பும் வேளைகளில்....
இமைகள் ஈரமாகும் பொழுதுகளில்....
“ஆண் பிள்ளை அழக்கூடாதப்ப” என்று
கட்டித் தழுவி ஆறுதல் சொன்னவன்....
வியாபார தோல்வியில் துவண்ட சமயத்தில்
“அப்பா இருக்கேன்பா... எல்லாம் பார்த்துக்கரேன்” என்று
என்னை உலகம் சுற்றவைத்து இயல்பினை
திரும்பக் கொண்டு வந்தவன்....
தன் பேரனின் சேட்டைகளையெல்லாம்
“குழந்தையிலே உன் புருஷன் செய்த குறும்பையெல்லாம்
அப்படியே இவன் செய்யிறமா....” என்று
தன் மகனின் இளமைகளை, தன் முதுமையில்
மீண்டும்.. மீண்டும் இரசித்த இரசிகன் இவன்....
இன்று என் அப்பா இல்லாத இந்த வெற்றிடம்
யாராலும் நிரப்ப முடியாந்தென்றாலும்....
நிலைக் கண்ணாடியை பார்க்கும் பொழுது
அதில் தெரிவது நான் அல்ல... என் அப்பா....
தெய்வம், கடவுள், தேவன், சாமி இவை எல்லாமே
எனக்கு நீங்க தான் அப்பா..
இதை எழுதும் பொழுது இமைகள் ஈராமகிறது...
ஆனாலும் அசரீரமாய் கேட்க்கிறது....
“ஆண் பிள்ளை அழக்கூடாதப்ப” என்ற உங்கள்
அன்புக் குரல்......