வேதங்கள் மட்டும் போதுமானதல்ல
திருமதி என்னும் உன்னை
திரு என்னும் நான் இன்னும் நேசிப்பது என்பது
வேதங்களின் பாஷையில் நீச்ச செயல்...
மறையாத காதலை
மறைக்க நினைத்த பொழுதுகளும்,
மறக்க நினைத்த பொழுதுகளும்
இதோ இப்பொழுதைப் போல்,
எப்பொழுதும் நீட்சிக் கொண்டே போகும் ...
நீ தேடி பெற்றுக் கொண்ட வரவுமல்ல ...
உன் பிரிவென்பது என்னை வாட்டும் சாபமுமல்ல ...
ஞானத்தைப் பெற வேதங்கள் மட்டும் போதுமானதல்ல
இதுப் போன்ற காதலும், அதன்
பிரிவின் சுகமும் கூட போதுமானதாய் உள்ளது...