ஜெய்ஸ் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜெய்ஸ் குமார் |
இடம் | : Coimbatore , Tirupur . |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 3 |
நான் ...
திரும்பினேன் , விரும்பினேன் ,
இரு விழி திருடிட இயங்கினேன்.
நான் ...
நெருங்கிட , தயங்கினேன் ,
உறவினை தொடங்கிட திணறினேன்.
மண் வாசம் சொல்ல - மழை
மேகங்கள் தூவியதோ
என் எண்ணம் உன்னைச் சேர
தூதொன்றும் இல்லை பாவம்.
உன் வசம் உள்ளேன் பெண்ணே
பெண் வளம் உண்பேன் கண்ணே
என் தேகம் தூங்கும் முன்பே
உன் தாகம் நீந்தும் அன்பே .
தென்றல் என் தேகம் தீண்டும்
நேரம் உன் மோகம் மீண்டும்
என்னுள்ளே ஆசை தூண்டும்
எண்ணங்கள் எல்லை தாண்டும்.
ஏன் ...
காதலும் , காமமும் ,
என்னை இரவும் பகலும் போல் துரத்துதே ?
நான் ...
திரும்பினேன் , விரும்பினேன் ,
இரு விழி திருடிட இயங்கினேன்.
நான் ...
நெருங்கிட , தயங்கினேன் ,
உறவினை தொடங்கிட திணறினேன்.
மண் வாசம் சொல்ல - மழை
மேகங்கள் தூவியதோ
என் எண்ணம் உன்னைச் சேர
தூதொன்றும் இல்லை பாவம்.
உன் வசம் உள்ளேன் பெண்ணே
பெண் வளம் உண்பேன் கண்ணே
என் தேகம் தூங்கும் முன்பே
உன் தாகம் நீந்தும் அன்பே .
தென்றல் என் தேகம் தீண்டும்
நேரம் உன் மோகம் மீண்டும்
என்னுள்ளே ஆசை தூண்டும்
எண்ணங்கள் எல்லை தாண்டும்.
ஏன் ...
காதலும் , காமமும் ,
என்னை இரவும் பகலும் போல் துரத்துதே ?
உன் எச்சில் , என் அன்னம் .
உன் தேகம் , என் ஆடை .
உன் கூந்தல் , என் கூரை .
உயிர் வாழ உனையன்றி வேறென்ன வேண்டும் ?
உனைஇன்றி உயிர் வாழும் நிலை ஒன்று நேர்ந்தால் ...
இவன் ஆயுள் - ஒரு திங்கள் ,
அது கூட , உன்னை எதிர்பார்த்தே ...