அவள் என் அத்யாவசியம்

உன் எச்சில் , என் அன்னம் .
உன் தேகம் , என் ஆடை .
உன் கூந்தல் , என் கூரை .
உயிர் வாழ உனையன்றி வேறென்ன வேண்டும் ?
உனைஇன்றி உயிர் வாழும் நிலை ஒன்று நேர்ந்தால் ...
இவன் ஆயுள் - ஒரு திங்கள் ,
அது கூட , உன்னை எதிர்பார்த்தே ...