களைந்து போன கனவு

நிகழாது என்றிருந்தேன்
நிகழ்கிறது என்னுள்ளும்
நொடிக்கு பல நிலநடுக்கம்

என்னை சிறைப்பிடித்த
உன் கயல் விழிகள்
கவித்துவமானவை

தொலைவுகளில் இருந்தாலும்
உன் நினைவுகளில் புரளுவது
இனியதோர் புது அனுபவம்

என்னை புரட்டிய பிறகு
என் கனவு பக்கங்களை
புரட்ட தொடங்கின
உன் நினைவுகள்

காதல் ஊற்றிய நகரமது
காணும் இடமெல்லாம்
கவிதை கிடங்குகள்

காற்றோடு வீசிய
கவிதையெல்லாம்
நம் காலடியில் கிடக்க

இயற்கையின் அழகோடு
நம் காதல் அழகும்
அரங்கேறின

வெட்கத்தால்
உன் இமை மீட்டியது
ஓர் புது சிம்பொனி

செதுக்கிய செவ்விதழின்
சலனத்தை கண்டு
சப்தமின்றி என்னிதழ்
நெருங்க

அலைபேசியில் அழைப்புமணி ஒலிக்க
சட்டென்று சகலமும் உடைந்து
கனவு களைந்து போனது

கல்லெறிந்த நீரோடையாய்
கலங்குகிறேன் உன்னை பிரிந்து

எழுதியவர் : கோபி (26-Jan-15, 2:23 am)
பார்வை : 218

மேலே