Jagatheesan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jagatheesan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Aug-2017
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
Jagatheesan செய்திகள்
Jagatheesan - எண்ணம் (public)
07-Aug-2017 7:25 pm

வெற்றிடம்...

வளையாத பேணா முட்கள்,
வரைந்திட்ட காணா சொற்கள்,
காகித வெற்றிடம்...  

மேலும்

Jagatheesan - எண்ணம் (public)
07-Aug-2017 7:25 pm

விடியல்...

பகல் இரவுகள் 
யாவும் தொடர்கதை...
அதில் விண்மீன் 
வெளிச்சம் விடுகதை...
இது விடியல் 
தேடிடும் மனதா???
உயர பறக்க 
தூண்டிடும் சிறகா???
இந்த வானம் பூமியும் 
புதிதாய் பிறக்குது வா வா...
இதில் எளியோர் வறியோர் 
வாழச்சொல்லுது வா வா...  

மேலும்

Jagatheesan - எண்ணம் (public)
07-Aug-2017 7:24 pm

நம்பிக்கை...


இரு கண்கள் நமக்கு,
கனவுகள் காண,
கண்ணீர் எதற்காக???
எதிர்காலம் நமக்கு,
காத்து கிடக்கு,
விதைப்போம் உழைப்பாக...

நாம் போகும்போது,
உடன்வரும் மேகம்,
தாகம் தீர்க்கத்தான்...
இனி கவலை துறந்து,
வானை அளப்போம்,
பருந்தை போலத்தான்...

தினம் விழுமே பல விதைகள்,
அதில் உயிர்க்கும் சில செடிகள்,
இந்த நம்பிக்கை ஒன்றேபோதும் 
வாழ்ந்திடத்தான்...

நாம் போகும் பாதை நீளம்,
ஆனால் தூரமில்லை...
போகத்துணிந்தால் வாழ்க்கை 
இங்கே பாரமில்லை...
உன் எண்ணம் அதை நீ மாற்று...
தினம் சுவாசி புதுவேட்கை காற்று...
இனி விண்மீன் போலே,
வாழ்வோம் அந்த வானின் மேலே...   
நம் வெளிச்சம் போதும் பூமி சிரிக்கும் 
இரவுக்குடையின் கீழே...   (இரு கண்கள்)

தத்தி தாவும் கால்கள் 
இருந்தால் ஓடிடுவோம்...
சிறு நத்தை ஆனால் நாளும்,
வழியில் ஊர்ந்திடுவோம்..
வழி தேடத்தானே கால்கள் நமக்கு...
வலிக்காமல் இங்கே வாழ்க்கை எவர்க்கு???
நம்பயணம் முடியும் முன்னே
புதுஉலகம்  காண்போமே...    
அதில் மற்றோர் கால்கள் பயணத்தானே,
பாதை அமைப்போமே...  (இரு கண்கள்)  

மேலும்

கருத்துகள்

மேலே