இ பொன்ராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இ பொன்ராஜ்
இடம்:  தென்காசி
பிறந்த தேதி :  01-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Feb-2022
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  57

என் படைப்புகள்
இ பொன்ராஜ் செய்திகள்
இ பொன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 6:24 pm

மெல்லிய நீரின்
அலையாய் வந்தாய்,
என் வாழ்வதனில்
நீ நுழைந்தாய்,

மெல்ல மெல்லமாய்
எனையும்
உன்னுள்ளே
அழைத்துச் சென்றாய்,

இந்த கருங்கல்லும்
நீந்த கற்றுக் கொண்டது
நீ அழைத்துச்
செல்லும் பாதையில்,

கரையேறவும்
ஆசையற்று மிதக்கிறது
நீ காட்டும்
பரிவதனில்,

மதுவின் வாசமறியாதவன்
மூழ்கித் திளைக்கிறான்
நீ தரும் காதலின்
போதையில்,

காதலித்து கரம்பிடிக்காத
காதல்கணவன்.

மேலும்

இ பொன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 6:22 pm

வெகுளியான பேச்சு,
வெள்ளந்தியான சிரிப்பு,
வேடிக்கையான பிரிவு,
விடுமுறை நாட்களில் சந்திப்பு,
வீட்டிற்கு விருந்தாளியான பூரிப்பு,

சிரிக்க வைக்கும் ரகசியங்கள்,
கந்தலான பள்ளிச் சீருடைகள்
கலக்கலான பிறந்தநாள் புத்தாடைகள்,
திருவிழாக் கதைகள் பரிமாற்றங்கள்,
தீபாவளி இனிப்பு பரிமாற்றங்கள்,

குளிர்பிரதேச சுற்றுலா கொண்டாட்டம்
குதுகலமான ஆண்டுவிழா கொண்டாட்டம்,

பள்ளி நட்புடன்....

மேலும்

இ பொன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 6:21 pm

அனல் வெயிலையும்
பொருட்படுத்தியதில்லை,
அடை மழையையும்
மிகைப்படுத்தியதில்லை,

அனாவசிய செலவுகளை
செய்யப் பழக்கவில்லை,
அத்தியாவசிய தேவைகளை
நிறைவேற்ற தவறியதில்லை,

ஆடம்பர சுகத்திற்கு
அடி பணிந்ததில்லை,
அறத்தின் வழியே
நிற்கத் தவறியதில்லை,

தவற்றைக் கண்டிக்க
தவறியதில்லை,
தறிகெட்டுத் திரியவும்
விட்டதில்லை,

தன் பேச்சை எதிர்த்துப்
பேச விட்டதில்லை,
என்னை என்றும் எதிரியாக
பாவித்ததில்லை,

தன் அழுக்குச் சட்டையை
அவமானமாக கருதியதில்லை,
என்மேல் என்றும் அழுக்குப்
படிய விட்டதில்லை,

அதிகாரத்தின் எல்லையை
விரிவுப்படுத்தியதில்லை,
அன்பின் ஆழத்தை என்றும்
அறியப்படுத்தியதில்லை.

மேலும்

இ பொன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 6:20 pm

பேசத் துடிக்கும் இதழ்களழகு,
பேசிக்கொண்டு இருக்கும் விரல்களழகு,

பிரிந்து இருக்கும் வகிடுமழகு,
பிரிந்து இணையும் இமையழகு,

படர்ந்து இருக்கும் நெற்றியழகு,
பாராது பார்க்கும் கண்களழகு,

ஒப்பனை இல்லா முகமழகு,
ஒப்பனை கலந்த பேச்சுமழகு,

வஞ்சனை இல்லா சிரிப்பழகு,
வஞ்சகம் செய்யும் பார்வையழகு,

அக்கறை காட்டும் கோபமழகு,
அள்ளிக் கொள்ளும் நாணமழகு,

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே