கருங்கல்லும் நீந்தும்
மெல்லிய நீரின்
அலையாய் வந்தாய்,
என் வாழ்வதனில்
நீ நுழைந்தாய்,
மெல்ல மெல்லமாய்
எனையும்
உன்னுள்ளே
அழைத்துச் சென்றாய்,
இந்த கருங்கல்லும்
நீந்த கற்றுக் கொண்டது
நீ அழைத்துச்
செல்லும் பாதையில்,
கரையேறவும்
ஆசையற்று மிதக்கிறது
நீ காட்டும்
பரிவதனில்,
மதுவின் வாசமறியாதவன்
மூழ்கித் திளைக்கிறான்
நீ தரும் காதலின்
போதையில்,
காதலித்து கரம்பிடிக்காத
காதல்கணவன்.