வஞ்சனை இல்லா சிரிப்பழகு

பேசத் துடிக்கும் இதழ்களழகு,
பேசிக்கொண்டு இருக்கும் விரல்களழகு,

பிரிந்து இருக்கும் வகிடுமழகு,
பிரிந்து இணையும் இமையழகு,

படர்ந்து இருக்கும் நெற்றியழகு,
பாராது பார்க்கும் கண்களழகு,

ஒப்பனை இல்லா முகமழகு,
ஒப்பனை கலந்த பேச்சுமழகு,

வஞ்சனை இல்லா சிரிப்பழகு,
வஞ்சகம் செய்யும் பார்வையழகு,

அக்கறை காட்டும் கோபமழகு,
அள்ளிக் கொள்ளும் நாணமழகு,

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:20 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 123

மேலே