கவித் தோழனின் கவிதை தோழி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவித் தோழனின் கவிதை தோழி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-May-2019 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
கவித் தோழனின் கவிதை தோழி செய்திகள்
பள்ளிப் பருவம்
பள்ளிப் பருவத்தின் நினைவின்
சிறையில் நாங்களோர் சிறைகைதியாய்!!!
வகுப்பறை தருணமோ
எம் வசந்தகால நிகழ்வுகள்
எடுத்து வந்த உணவோ ஒரு வகை
பிடிங்கி உண்ட உணவோ பல வகை
ஆண்பெண் பலினம் மறந்தே
ஆனந்தமாய் நாள் கடந்தோம்
நொடிகள் பல நகர்ந்தும்
என்றும் குறையா
எம் நெடுங்கால பந்தம்!!
அன்புக் கடலில் மிதந்தோம்
ஆசைக் நதியில் தவழ்ந்தோம்
அழியா உறவாய் உருவெடுத்தோம்
கரைஒதுங்கா படகாய்
ஓன்றினைந்து எழுந்தோம்
ஏனோ காலத்தின் சுழற்சியால்
கண்ணீரும் கரைந்து வர
விடைபெற முடியாமல்
விடைகொடுத்தோம்
நட்புக்கல்ல
எங்கள் வருகைக்கு...
நீலநிற என்னவனும்
பச்சை நிற இனியவலும்
(காதல் பறவைகள்)
சின்னஞ்சிறு வண்ணக்கிளியே
சிங்கார வஞ்சிமலரே
இணைப்பிரியா ஈர்உயிராய்
இம்மண்ணில் நீ அடியெடுத்திடவே
அன்பின் வெளிப்பாடாய்
பாசத்தின் பரிமாணமாய்
காதல் பறவையாய்
இப்புவியிலே பிறப்பெடுத்தாய்!!
உந்தன் அன்பின் ஈர்ப்பை கண்குளிர காண்கையிலே
கூக்குயிலின் ஒளியை
செவியோடு கேட்கையிலே
உணவூட்டும் அழகை
விழியோடு பார்கையிலே
விளையாட்டுத்தனத்தை
வியப்போடு ரசிக்கையிலே
வர்ணிக்க வார்தையன்றி நானோ இன்று வாயடைத்து நிற்கின்றேன்!!
கருத்துகள்