பள்ளிப் பருவம் பள்ளிப் பருவத்தின் நினைவின் சிறையில் நாங்களோர்...
பள்ளிப் பருவம்
பள்ளிப் பருவத்தின் நினைவின்
சிறையில் நாங்களோர் சிறைகைதியாய்!!!
வகுப்பறை தருணமோ
எம் வசந்தகால நிகழ்வுகள்
எடுத்து வந்த உணவோ ஒரு வகை
பிடிங்கி உண்ட உணவோ பல வகை
ஆண்பெண் பலினம் மறந்தே
ஆனந்தமாய் நாள் கடந்தோம்
நொடிகள் பல நகர்ந்தும்
என்றும் குறையா
எம் நெடுங்கால பந்தம்!!
அன்புக் கடலில் மிதந்தோம்
ஆசைக் நதியில் தவழ்ந்தோம்
அழியா உறவாய் உருவெடுத்தோம்
கரைஒதுங்கா படகாய்
ஓன்றினைந்து எழுந்தோம்
ஏனோ காலத்தின் சுழற்சியால்
கண்ணீரும் கரைந்து வர
விடைபெற முடியாமல்
விடைகொடுத்தோம்
நட்புக்கல்ல
எங்கள் வருகைக்கு...