எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீலநிற என்னவனும் பச்சை நிற இனியவலும் (காதல் பறவைகள்)...

         நீலநிற என்னவனும்
         பச்சை நிற இனியவலும்
              (காதல் பறவைகள்)


சின்னஞ்சிறு வண்ணக்கிளியே
சிங்கார வஞ்சிமலரே
இணைப்பிரியா ஈர்உயிராய்
இம்மண்ணில் நீ அடியெடுத்திடவே
அன்பின் வெளிப்பாடாய்
பாசத்தின் பரிமாணமாய்
காதல் பறவையாய்
இப்புவியிலே பிறப்பெடுத்தாய்!!
உந்தன் அன்பின் ஈர்ப்பை கண்குளிர காண்கையிலே
கூக்குயிலின் ஒளியை
செவியோடு கேட்கையிலே
உணவூட்டும் அழகை
விழியோடு பார்கையிலே
விளையாட்டுத்தனத்தை
வியப்போடு ரசிக்கையிலே 
வர்ணிக்க வார்தையன்றி நானோ இன்று வாயடைத்து நிற்கின்றேன்!!

நாள் : 12-May-19, 10:52 pm

மேலே