யாரும் பார்க்காததில்லை யாரும் படிக்காததில்லை யாரும் சொல்லாததில்லை யாரும்...
யாரும் பார்க்காததில்லை
யாரும் படிக்காததில்லை
யாரும் சொல்லாததில்லை யாரும் கேட்காததில்லை
யாரும் உணராததில்லை
யாரும் புரியாததில்லை
நான் பார்த்ததை புரிந்ததை
உணர்ந்ததை
எழுத்துகளில் வடிக்க
வார்த்தைகளைத் தேடுகிறேன்
சில எண்ணங்கள்
உருவம் பெற்று கவிதையாகிறது
சில எண்ணங்கள்
நினைவில் கலந்து
காலத்தில் கரைகிறது