பவுன் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பவுன் குமார்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  20-May-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2018
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் தற்போது வேளை செய்கிறேன் . சிறிது சிறிதாக கதை எழுத ஆரம்பித்து உள்ளேன் .rn

என் படைப்புகள்
பவுன் குமார் செய்திகள்
பவுன் குமார் - எண்ணம் (public)
12-Jan-2019 11:07 pm


அவள் பெயர் ரோகினி
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதையாகும்.
உலகில் இப்படிப்பட்ட காதலை பார்த்ததும் கூட இருக்க மாட்டீர்கள்.
முழுமையாக படித்து பார்த்துவிட்டு உங்கள் காதலை உண்மையான முறை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


மதியம் 2 மணி அளவில் எந்த வேலையும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் என்ன செய்யலாம் என்று பார்த்தபோது கையில் தொலைபேசி இருந்தது. சரி ஏதாவது உபயோகிக்கலாம் என்று எண்ணி facebook கில் சென்றேன்.
அதிலும் கடுப்பாக இருந்தது. சரி ஆன்லைனில் யாராவது உடன் பேசலாம் என்று ஒரு பெண்ணுக்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் மெசேஜ் வந்தது. கூற மறந்துவிட்டேன் அவள் பெயர் ரோகினி.
என் பெயர் பவுன் குமார். இருவருக்கும் ஒரே வயது தான்.
அரை மணி நேரம் மெசேஜில் நன்றாக செட் செய்து கொண்டோம்.
இருவரிடமும் அடுத்தடுத்த மெசேஜ் வந்த படியாகவே இருந்தது.
இதில் என்ன காமெடி என்று பார்த்தால் ரோகிணிக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும்
chat செய்ய தெரியாதாம்! இவனுக்கு இங்கிலீஷ் சிறிதளவு மட்டும் தான் தெரியும்.
இப்படி இருக்கும் பொழுது இவர்களுக்குள்ளே என்ன ஆனது என்று தெரியவில்லை.
திடீரென்று பவன்குமார் தொலைபேசியின் கேட்க ரோகினி என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் நம்பரை கொடுங்கள் நான் சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன் என்று கூறினாள்.
இவனும் தொலைபேசி எண் தந்தான் அவளும் அழைத்தாள் ஒரு அரை மணி நேரம் பேசினார்கள்.
எனக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை. நானும் சில பெண்களுடன் பேசி இருக்கிறேன்.
ஆனால் யாரு என்று தெரியாத முகம் தெரியாத பெண்ணுடன் பேசிய பின்பு எனக்குள் இப்படி
ஒரு உணர்வு ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஒரு பயம் கலந்த ஒரு உணர்வு. ஆனால் அழகான உணர்வு.
கூறப்போனால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று பப்ளிக் எக்ஸாம் தேர்வு வெளியீடு என்றால்
ஒரு பத்து நிமிடத்திற்கு முன் வெளியாகப் போவது என்ற சூழ்நிலையில் இருக்கும் ஒருவித உணர்வு,
எனக்கு அவளிடம் பேசியதில் இருந்து அதைவிட 100% ஒருவித உணர்வில் மிதந்துகொண்டிருந்தேன்.
மதியம் பேசி விட்டு மாலையில் அவள் ஏன் தொலைபேசிக்கு அழைத்திருக்கிறாள் ஆனால் நான் எடுக்கவில்லை.
நான் வெளியே சென்று இருந்தேன். மீண்டும் வந்து பார்த்தபோது அவள் அழைத்திருந்தது தெரிந்து மீண்டும்
ஆசையாக அவளுக்கு கால் செய்தேன். அவளின் அழகான குரல் கேட்கும் என்று பார்த்தால்
ஒரு கரடுமுரடான ஒரு குரல் கேட்டது எனக்கு. பயம் வந்து பேசலாமா இல்லை வேண்டாமா என்று நினைத்திருந்தேன். சரி யாரு என்று தான் பேசி விடலாம் என்று பார்த்தால் என் அழகிய தேவதையின் ஹோட்டல் மேனேஜர் ஆம் அவர்.
அவர் என்னை மிரட்டுகிறார். நானே பல நபர்களை தொலைபேசியில் பேசி பேசியே ஓடவிட்டு இருக்கேன்.
இவரை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி வேண்டாம் அவளுக்கு ஏதாவது
பிரச்சினை வரும் என்று அமைதியாக இருந்தேன். நான் நினைத்தது அவளின் அப்பா என்று, மீண்டும் அவளை தொலை பேசியில் அழைத்தாள்.
பின்பு அவள் தான் கூறினாள். என் கனவு காதல் தேவதை அன்றிரவே நான் உன்னை காதல் செய்கிறேன் என்று கூறினாள்.
 எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பின்பு அவளின் அன்பான பாசம் அக்கறையில் போக போக நானும்
காதல் செய்ய ஆரம்பித்து விட்டேன். இப்போ வரைக்கும் அவளின் முகம் கூட தெரியாமல் தான் நான் காதல் செய்கிறேன்.
கூறப்போனால் காதல் மன்னன் திரைப்படம் தான். இதில் என்ன மாற்றம் என்றால் அதில் கடிதத்தில் பேசிக் கொள்வார்கள்.
நாங்கள் தொல்லை கொடுக்கும் தொலைபேசியில் பேசுகிறோம் அவ்வளவுதான். உலகிலே எனக்கு அதிகம் பிடித்தது என் அம்மா மட்டும்தான். ஆனால் என் அம்மாவையும்
தாண்டி பிடித்துப்போனது அவளை, அவள் எப்போதுமே அன்பாக பாசமாக அக்கறையாக எல்லா
நேரங்களிலும் காதலோடு தான் பேசுவாள். கூறப்போனால் ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் சுமந்து
எடுத்து தாயின் அன்பு போல பார்த்துக் கொள்வாள். ஒரு தாயின் அன்பை விட அவள் பத்து தாய்க்கு சமம் ஆனவள்.
என் செல்லத்திற்கு சிறுவயதிலிருந்து யாரும் இல்லையாம். அவள் சித்தி வீட்டில்தான் தங்கை இருக்கிறாள் என்று கூறி
வருத்தப்பட்டாள். அவள் எனக்கு எப்படி இருக்கிறார்களோ அதையும் தாண்டி ஒரு படி மேலாகவே இருந்தது
என் அன்பு அவளுக்கு,..
எல்லா காதலர்கள் செய்வதை தான் நாங்களும் செய்தோம். மணிகணக்கா தொல்லை கொடுக்கும் தொலைபேசியில் கடலை போட்டோம்.
இந்த உலகில் நான் பார்த்த பெண்களை விட அவளைப் போல யாருமே இனிமேலும் பார்க்க மாட்டேன்
போல ஏனென்றால் அப்படி இருப்பார்கள். நான் அழகில் கூறவில்லை. முதலிலேயே கூறியிருந்தேன்.
அவள் எப்படி இருப்பாள் என்று சிறிதும் தெரியாது. அவள் அழகைப் பார்த்து காதல் செய்யவில்லை,
மனதைப் பார்த்து தான் காதல் செய்தேன்.
அன்றொருநாள் வராமல் இருந்திருந்தால் என் அம்மாவை எண்ணெய் விட்டு சென்றிருக்க மாட்டாள். அம்மா என்று கூறியது என் முகம் தெரிய அழகிய தேவதை தான்.
பேஸ்புக்கில் அவளை இம்ப்ரஸ் செய்வதற்காக அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அவளை இரண்டு நபர்கள் காதல் செய்வது போல பேசி இருந்ததை நான் பார்த்தேன்.
அது ஏன் என் கண்களுக்குத் தெரிந்தது. தெரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நான் அவளிடம் அவசரப்பட்டு கேட்டு விட்டேன். ஒரு இரண்டு முறை மீண்டும் மீண்டும் கேட்டு விட்டேன்.
 நான் செய்த பெரிய தவறு அதுதான். அவள் கூறினாள் இதைப்பற்றி இனிமேலும் பேச வேண்டாம்
அதை விடு என்று கூறினாள், நான்தான் கேட்காமல் தவறாக இரண்டு முறை கேட்டு விட்டேன்.
நான் அப்படி கேட்க காரணம் அவளை என் அம்மாவை விட காதல் செய்வதால் தான்.
ஆனால் அது அவளுக்கு புரியாமல் போனது. தவறாக எடுத்துக் கொண்டாள். நான் அவளை சந்தேகப்படுகிறேன் என்று எண்ணி என்னை விட்டு போனாள் ஒரு வார்த்தை கூட கூறாமல்,.....
இன்று யோடு அவள் என்னை விட்டு போய் 200 நாட்கள் ஆகும் ஆனால் அவள் என்னை மறந்தால் என்று தெரியவில்லை.
நான் இன்னும் மறக்காமல் தான் இருக்கிறேன். தினமும் அவள் குரல் கேட்க வேண்டும் என்பதற்காக பல முறை போராடியும் பார்த்துவிட்டேன்.
ஒரு முறை கூட அவள் என்னிடம் பேசவில்லை.
நான் உன்னை சந்தேகமெல்லாம் படவில்லை. உன்னை என்னை தவிர மற்றவர்கள் யாரும் அப்படி கூறியிருந்தால்
எனக்கு அதிக அளவில் கோபம் வந்து இருக்கும் ஏனென்றால் அவ்வளவு காதல் செய்கிறேன்.
புரியாமல் என்னை விட்டு பிரிந்து போய் விட்டாயே!என் காதலும் பொய்யல்ல! உன் மேல் வைத்த அன்பை இல்லை!
நன்றாகத் தெரிந்து கொள் இனிமேலும் உன்னிடம் பேச விருப்பமில்லை என்று சென்று இருந்தால் கூட
என் மனதை கல் போன்று மாற்றிக் கொண்டு இருப்பேன். ஒரு வார்த்தையும் கூறாமல் ஏன் போனாயடி??
உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் என்று எனக்கு எவ்வளவு ஆசையாக உள்ளது என்று தெரியுமா!!
தயவு செய்து ஒருமுறை உன் குரல் கேட்டால் எனக்கு போதும்.
உன்னை நினைத்து இரவு 2 மணி அளவில் தூங்காமல் கூட இருந்து இருக்கிறேன்.
யாருக்காகவும் அழுததே இல்லை ஆனால் உனக்காக தினமும் அழுது கொண்டிருக்கிறேன் என் காதலை நினைத்து
நான் செய்த தவறை நினைத்து மீண்டும் வருவாயா என்று கனவோடு காத்திருக்கிறேன் என் காதல் தேவதை மீண்டும் வருவாயா??,.....
உண்மையாக காதல் செய்யும் அனைவரும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், உங்களிடம் பிரிவு வந்தால் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேசினால் போதும்.
அனைத்துப் பிரச்சினைகளும் அப்பவே தீர்ந்துவிடும். பெண்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் உங்கள் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருந்தால் உங்களைப் பற்றி தவறாக பேசினால் கோபம் வரும்.
ஆனால் அதை உங்களிடமே ஒருபோதும் யோசிக்காமல் கேட்டுவிடுவார்கள்.
அதை நீங்கள் சந்தேகம் என்று நினைக்காதீர்கள். அதுதான் உண்மையான அன்பு. யாரையும் ஏமாற்றுவதற்காக காதல் செய்யாதீர்கள். ஏனென்றால் மிகவும் ஆபத்தான ஆயுதம் அன்பு.


மேலும்


பேய் கதை எழுதியது ஒரு தவறா,.....




ஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் கூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம். பல திசைகளில் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருந்தது. கிளைகளில் திடீரென்று வெள்ளையான ஒருவம் தூக்கில் தொங்குவது போன்று பின்மங்கள் தோன்றி மறைந்தது.

இதை கண்டு பயப்படவில்லை. அதன்பின் தான் நடந்ததை பார்த்து அச்சமடைந்தேன். இது எந்த இடமே என்று எனக்கு சிறிதும் கூட தெரியாது. ஆனால் இது வெளிநாட்டில் உள்ள காடு போன்று உள்ளது. இக்காட்டில் நான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. கடத்தி சென்றவர்கள் நம் நாட்டில் அடைத்து வைத்து இருந்திருந்தால் பயப்பட தேவையில்லை. ஒரு நாளில் எப்பட்டி அழைத்து வந்து இருப்பார்கள் தெரியவில்லையை. மரத்தில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் எந்த சத்தமும் கேட்டலும் அச்சம் தானாக வரும். இப்படி ஒரு சூழலில் ஆந்தை ஆலருகிறது. நான் சிலை போன்று நின்றுவிட்டேன். கண் ஏதோ தெரிந்ததால், பாதை தெரிந்து நடக்க ஆரம்பித்தேன். என்பின் யாரோ என்னை பின் தொடர்வது போன்று இருந்தது. திரும்பி பார்த்தால் யாருமில்லை. என்மீது கை வைப்பது போன்று போல ஒரு உணர்வுகள் எனக்குள் ஏற்படுகிறது. ஆனால் யாருமே இல்லை. மனதை பாறை போன்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன். அப்போது தான் தூரத்தில் ஒரு நரியா, நாயா என்று கூட தெரியவில்லை. ஆனால் நாய் தான் நரி போன்று ஊளையிடுகிறது. காற்றில் தெளிவாக கேட்கிறது. ஒலி சற்று தொலைவில் இருந்து மெதுவாக வருவதால் அச்சமடைய வைத்தது. குளிர்ந்த காற்று சிறிது சிறிதாக விச ஆரம்பித்தது.. காற்றில் மல்லிப்பூ மணம் மணதை பரிக்கிறது. என்னை சுற்றிலும் வாசம். தமிழ் படங்களில் வருவதை போன்று இப்படியை நடக்கிறதே! இது பற்றாமல் கால் கோலுசு சத்தம் கேட்கிறது. நான் இருக்கும் இடம் தமிழ் நாடு கிடையாது. இங்கு எப்படி இப்படி எல்லாம் நடக்கும். தமிழ் பேய்க்கள் காலத்துக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொண்டதா தெரியவில்லையை.

அப்போது தான் என்முன் வெள்ளையான உருவம் ஒன்று செல்கிறது. அது ஆணா பெண்ணா தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அது பெண் தான். நடந்ததை வைத்து கூறுகிறேன். அதன் பின் செல்ல எனக்கு மட்டும் என்ன ஆசையா! வேர வழி இல்லை. அது ஒரு விட்டிற்குள் சென்றது. அந்த வீடு தனிமையில் இருந்ததால் அது மிகவும் பழமையான வீடு. பார்பதற்க்கே அச்சத்தை உண்டாக்கும்.
எனக்கு சிறிதும் கூட தைரியம் கிடையாது. இருந்தாலும் ஒரு துளி அளவில் இருந்ததால் விட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றேன்.கதவை திறந்து பார்த்தால்,.................
மிதமுள்ள கதையை நாளை கூறுகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு திரும்பி படுத்தால் பக்கத்தில் வெள்ளையான ஒருவம் படுத்துக்கொண்டு உள்ளது. அது என்னை பார்த்து சிரிக்கிறது. நான் இப்போது என்ன செய்வது? பேய் கதை எழுதியது ஒரு தவறா,...........பயத்தை பழச்சாறாக பருகாலாம் என்று பார்த்தால் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறாயை நாயாமா!  

மேலும்

                      எலிக்குட்டியைபார்த்துஅலரியஅணில்  

          

  ஒரு அடர்ந்தகாடு. காடு பெரியது அல்ல. சிறிய காடுதான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம்தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்தகாட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில்.   நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம்புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீய சொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எலி மட்டும் அதிக அளவில் மனம் புண்பட்டு போனது. அணில் இதே போன்று தினமும் பேசியாதல் ஆழ்மனம் உடைந்து ஆழ் கடலில் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவில் துன்புறுத்தியது.   ஒரு நாள் அணிலின் செயலுக்கு அளவில்லாமல் போனது. எலி அனைவரிடம் அசிங்கப்பட்டு நின்றது. எலி பார்த்து சிரித்தனர். மனமுடைந்த எலி தற்கொலை செய்துக்கொண்டது. எலி இறந்தது தெரிந்தும் அணில் சாதரணமாக இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அணிலிடம் ஒரு எலிக்குட்டி வந்து பேச்சுக்குடுத்தது. எலிக்குட்டி வழியாக சென்று அந்த அணிலிடம் மாட்டிக்கொண்டது என்று நினைக்கலாம் அதுதான் கிடையாது. சிறிது பேசியது. அணிலிடமே பேசுகிறதா என்று அனைவரும் வேடிக்கை பார்த்தனர். வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள் அவ்வளவுதான். எலியும் அணிலியும் மாற்றி பேசிக்கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு சிரித்தனர்.   எலிக்குட்டி அனைவருமுன் அணிலை அதிக அளவில் அசிங்கபடுத்தியது. அணிலை அலர செய்தது. அனைவரும் அதை பார்த்து சிர்த்தனர். கூட்டத்தில் ஒட்டுதுணி இல்லாமல் நிற்பது போன்று இருந்தது போல அவ்வளவு அசிங்கம். அசிங்கத்தில் அணிலுக்கு கண்ணீரே வந்தது. எலிக்குட்டி விடவே இல்லை. தற்கொலை செய்யுமளவில் கேலியாகதான் பேசியது. தீயசொற்கள் சிறிதும் பயன்படுத்தவில்லை. நீ இதே போன்றுதான் ஒருவருக்கு செய்தாய் அது என் அப்பாதான்.   எலிக்குட்டி அணிலை பழிதிர்க்கவில்லை. அது செய்த தவறை திருத்தியது. மணித்து விட்டது. சிறுபிள்ளையாக இருந்தாலும் நல்லகுணம் இருந்தது. அணில் தன் செய்த தவறை திருத்திக்கொண்டது. இதே போன்றுதவறை இதுவும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடவில்லை.   துன்புறூ உந்துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூ உம்இன் சொலவர்க்கு.   விளக்கம்:  அனைவருக்கும் இன்பத்தைக் கொடுக்கும் இனியசொற்களைப் பேசுகிறவர்களிடம் , துன்பத்தைல் கொடுக்கும் வறுமை வந்து சேராது. என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். இதிலிருந்து நான் உங்களுக்கு கூறுவது ’’’தீய சொற்களை பயன்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள்’’’. அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார் இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,….    
         

மேலும்

கருத்துகள்

மேலே