பவுன் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பவுன் குமார் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 20-May-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
பவுன் குமார் செய்திகள்
தந்திர நரி
தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.
நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.
என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.
தந்திர நரி
தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.
நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.
என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.
அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார்
இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,....
ஆறு அறிவு கொடுத்த கடவுளே
ஒரு நல்ல வேலையை கொடுக்க மறந்துவிட்டாயோ ஏன்!
இமைகள் இல்லா மீனாய் உன்னை பார்க்க ,
இமைகளை இமைக்க கற்று தந்தாய்
நானும் கற்றுக்கொண்டேன் , காதலை
காரணம் தெரியாமல் காதலித்துவிட்டேன்
காதலித்தால் காரணம் தெரியாமல் போனேன்
கண்ணுக்குள் கண்களாய் வந்த்தாய் , பின்பு
கருவிழியாய் நுழைந்தாய்
என்னை மறந்து பறந்தேன் , பின்பு
மெய் மறந்து சிரிக்கிறேன் இப்போது
தன்னிலை மறந்து தண்ணீரில் மிதக்கிறேன் நாயாமா ?
நாயமா? வ விடவேமாட்டிங்க்ல ......அருமை !! 17-Jan-2018 4:38 pm
பேய் கதை எழுதியது ஒரு தவறா,.....
ஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் கூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம். பல திசைகளில் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருந்தது. கிளைகளில் திடீரென்று வெள்ளையான ஒருவம் தூக்கில் தொங்குவது போன்று பின்மங்கள் தோன்றி மறைந்தது.
இதை கண்டு பயப்படவில்லை. அதன்பின் தான் நடந்ததை பார்த்து அச்சமடைந்தேன். இது எந்த இடமே என்று எனக்கு சிறிதும் கூட தெரியாது. ஆனால் இது வெளிநாட்டில் உள்ள காடு போன்று உள்ளது. இக்காட்டில் நான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. கடத்தி சென்றவர்கள் நம் நாட்டில் அடைத்து வைத்து இருந்திருந்தால் பயப்பட தேவையில்லை. ஒரு நாளில் எப்பட்டி அழைத்து வந்து இருப்பார்கள் தெரியவில்லையை. மரத்தில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் எந்த சத்தமும் கேட்டலும் அச்சம் தானாக வரும். இப்படி ஒரு சூழலில் ஆந்தை ஆலருகிறது. நான் சிலை போன்று நின்றுவிட்டேன். கண் ஏதோ தெரிந்ததால், பாதை தெரிந்து நடக்க ஆரம்பித்தேன். என்பின் யாரோ என்னை பின் தொடர்வது போன்று இருந்தது. திரும்பி பார்த்தால் யாருமில்லை. என்மீது கை வைப்பது போன்று போல ஒரு உணர்வுகள் எனக்குள் ஏற்படுகிறது. ஆனால் யாருமே இல்லை. மனதை பாறை போன்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன். அப்போது தான் தூரத்தில் ஒரு நரியா, நாயா என்று கூட தெரியவில்லை. ஆனால் நாய் தான் நரி போன்று ஊளையிடுகிறது. காற்றில் தெளிவாக கேட்கிறது. ஒலி சற்று தொலைவில் இருந்து மெதுவாக வருவதால் அச்சமடைய வைத்தது. குளிர்ந்த காற்று சிறிது சிறிதாக விச ஆரம்பித்தது.. காற்றில் மல்லிப்பூ மணம் மணதை பரிக்கிறது. என்னை சுற்றிலும் வாசம். தமிழ் படங்களில் வருவதை போன்று இப்படியை நடக்கிறதே! இது பற்றாமல் கால் கோலுசு சத்தம் கேட்கிறது. நான் இருக்கும் இடம் தமிழ் நாடு கிடையாது. இங்கு எப்படி இப்படி எல்லாம் நடக்கும். தமிழ் பேய்க்கள் காலத்துக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொண்டதா தெரியவில்லையை.
அப்போது தான் என்முன் வெள்ளையான உருவம் ஒன்று செல்கிறது. அது ஆணா பெண்ணா தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அது பெண் தான். நடந்ததை வைத்து கூறுகிறேன். அதன் பின் செல்ல எனக்கு மட்டும் என்ன ஆசையா! வேர வழி இல்லை. அது ஒரு விட்டிற்குள் சென்றது. அந்த வீடு தனிமையில் இருந்ததால் அது மிகவும் பழமையான வீடு. பார்பதற்க்கே அச்சத்தை உண்டாக்கும்.
எனக்கு சிறிதும் கூட தைரியம் கிடையாது. இருந்தாலும் ஒரு துளி அளவில் இருந்ததால் விட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றேன்.
கதவை திறந்து பார்த்தால்,.................
மிதமுள்ள கதையை நாளை கூறுகிறேன் என்று எழுதி முடித்துவிட்டு திரும்பி படுத்தால் பக்கத்தில் வெள்ளையான ஒருவம் படுத்துக்கொண்டு உள்ளது. அது என்னை பார்த்து சிரிக்கிறது. நான் இப்போது என்ன செய்வது? பேய் கதை எழுதியது ஒரு தவறா,...........
பயத்தை பழச்சாறாக பருகாலாம் என்று பார்த்தால் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறாயை நாயாமா!
நல்லாயிருக்கு . intersting story !! 17-Jan-2018 4:35 pm
மேலும்...
கருத்துகள்