பனித்துளிசங்கர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பனித்துளிசங்கர்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  01-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2020
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என்னைப் பற்றி...

உரிமை கொண்டாடும் உறவுகளைவிட உணர்வுகளை புரிந்துகொள்ளும் நடப்பு புனிதமானது ...

என் படைப்புகள்
பனித்துளிசங்கர் செய்திகள்

எந்திரன் சிறகுகள் !.

இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம்
இன்று சிறகுகள் முளைத்து
சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !

 இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும்
இன்னும் கலையாத கனவுகளாய்
மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன்.

மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்...
வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமே!..

கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,
அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்
இவைகளில் இன்னும் 
மிச்சம் இருக்கும் சுதந்திரம்
எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !..

ஏற்றிக் கட்டிய கோவணம்,
சூரியனை மிரட்டும் இருட்டுத் தேகம் ,
வற்றிப்போன நதியாய் இவனின் இரத்தம்,
வற்றாத கடலாய் இவனின் உழைப்பு என
அனைத்தையும் குழைத்து ஏர் பிடித்து
பூமி கிளரிய பழைய மனிதன் இன்று
பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தருகிறான்.

வியர்வைகளை சேற்றில் மட்டுமே
 சிந்தியதால்தான் என்னவோ
இன்னும் அழுக்காகவே இருக்கிறது
என் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை !

- பனித்துளி சங்கர்.
.
.
.
.

மேலும்

பனித்துளிசங்கர் - பனித்துளிசங்கர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2020 10:17 pm

மரம்தின்ற மனிதர்கள் ....

இளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை 
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ
.ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும்
அவன் தாகம் தீர்ப்பானோ....!????

மனிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!

வெட்டப்படும் மரங்களின்
அழுகை சத்தம்
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும்
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....

எத்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின்
தாய்பால் பறித்தோம்......

வித விதமாய்
தினம் தினம் புதிது புதிதாய்
சிரித்த எத்தனை பூக்களின்
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்....

விதை ஊன்றி
உயிர் கொடுக்க வேண்டிய
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால்
வலி என்கிறோம்
பூக்கள் காயம் கண்டால்
அதன் விதி என்கிறோம்......
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த
மனூட அரக்கர்களுக்கே உரிய
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!?

சிறு நரை முடி உதிர்ந்தாலே
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!?

நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும்
என் தலைமுறை சுவாசிக்க
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?

எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.

- பனித்துளிசங்கர்

மேலும்

மரம்தின்ற மனிதர்கள் ....

இளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை 
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ
.ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும்
அவன் தாகம் தீர்ப்பானோ....!????

மனிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!

வெட்டப்படும் மரங்களின்
அழுகை சத்தம்
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும்
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....

எத்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின்
தாய்பால் பறித்தோம்......

வித விதமாய்
தினம் தினம் புதிது புதிதாய்
சிரித்த எத்தனை பூக்களின்
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்....

விதை ஊன்றி
உயிர் கொடுக்க வேண்டிய
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால்
வலி என்கிறோம்
பூக்கள் காயம் கண்டால்
அதன் விதி என்கிறோம்......
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த
மனூட அரக்கர்களுக்கே உரிய
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!?

சிறு நரை முடி உதிர்ந்தாலே
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!?

நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும்
என் தலைமுறை சுவாசிக்க
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?

எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.

- பனித்துளிசங்கர்

மேலும்

கருத்துகள்

மேலே