அரவிந்த் கே ராவ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அரவிந்த் கே ராவ் |
இடம் | : ஸ்ரீரங்கம், திருச்சிராப் |
பிறந்த தேதி | : 23-Apr-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 1 |
ஒரு சிறு புல் நான், என்னுள்ளே தியானித்து சமுதாயத்தை வளர்க்க பாடு படும் ஜீவன். மாற்றம் நிகழும் என காத்து இருக்காமல், நம்மால் இயன்ற மாற்றங்களை அரங்கேற செய்யலாமே என்ற ஆவல். எழுத்து இறைவன் பிச்சை போட்ட வரம் எனக்கு. என் எழுத்துக்கள் மூலமாக உலகத்திற்கு செய்தி சொல்லும் தபால் காரனாய் நான்.கற்பது தினம் தோரும் நிகழும் ஒரு நிகழ்ச்சி, அலைகளை போல். சில நேரங்களில் வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன்.
அறுந்துபோன மக்களின் தாலி
மக்கள் ஆட்சி என்று ஓர் பெருமிதம்
சிக்கல் ஆட்சி ஆனதுவோ ஓர் அமரர் ரதம்
திட்டம் தீட்டி தீட்டி
யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டி
தரமான கல்வி மாண்டு போன அவலம்
விவசாயி ஆனான் த்ராணியற்ற சடலம்
நுகர்வோர் பொருட்களோ யானை விலை
நோய்கள் புதிது புதிதாய் மக்களை தாக்கும் நிலை
கலப்படம் எதிலும் செய்யும் குள்ளநரிகளின் கலை
மரணம் ஒரு நாள் நமக்கும் நிகழும் என்று
இயற்கை கொடுத்த வரத்தை மக்களுக்கே கொடுத்து
தன்முனைப்பு இன்றி இறக்கும் தருவாயில்
நான் எதையும் எடுத்து செல்லவில்லை என்ற கலையை
எப்பொழுது கற்று கொள்ளப்போகிறீர்கள் ஆட்சியாளர்களே..