lavanya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : lavanya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 5 |
கைகள் சமைத்து
கண்கள் ருசி பார்த்து
காண்போருக்கு விருந்தளிப்பது............
மகளிர் தினம்
இந்த வார்த்தையை கூறுகையில்
மனதில் ஓர் மகிழ்ச்சி !
அவள் சுவர்களில் இருக்கும்
கிறுக்கல்கள் அல்ல
சுவடுகளில் சேர்த்து வைக்கப்பட வேண்டிய
சரித்திரம் - ஆனால்
நம் சமூகம் சரித்திரங்கள்
மீதுதான் சண்டையிடுகின்றனர் .......
வறண்ட பாலைவனத்தில் அரிதாய்
பூத்த பூ போல் இருக்கக்கூடாது
அவளின் சாதனை .......
நந்தவனம் போல் எல்லா இடங்களிலும்
மலர வேண்டும் அவள் சாதனை .....
அவள் விடியலுக்காக காத்திருப்பவள் அல்ல
சாதனைகளால் புதிய பல விடியலை உருவாக்குபவள்......
வலிகளை தளர்த்திவிட்டு - பல
வழிகளை தன்னுள் விதைப்பவள்!.....
அவள் விதை
நாம் செய்கின்ற ஓவ்வொரு முயற்சியிலும்
ஏமாற்றம் கிடைக்கிறதே என்று
கவலை கொள்ள வேண்டாம் - ஏனென்றால்
அந்த முயற்சிகள் அனைத்தும்
நமக்கு ஏமாற்றத்தை அல்ல - மாறாக
மாற்றத்தையே தருகிறது.. - ஏனென்றால்
மாற்றத்தின் பிறப்பிடம் ஏமாற்றம்...............
தாயின் கருவறையில் நான் மலர்ந்தாலும்
மடிவது மட்டும் - என்
பாராத தாயின் மடியில்தான் !
சீறி வரும் குண்டுகளும்
என் மீது பட்ட காயங்களும்
எனக்கு அளிக்கப்பட்ட அழியா விருதுகள்
விருதுகளின் மகிழ்ச்சியை - என்
தேசத்திற்கு தருகிறேன் - ஆனால்
விருதுகளின் வலியை மட்டும் - என்
தேகத்திற்கு தருகிறேன் .....
எங்கள் மூச்சு நிற்கும் கடைசி நொடி கூட ...
மூவர்ணக் கொடிக்காகத்தான் இருக்க வேண்டும் !
இறுதியில் ,
எங்கள் மேல் ரோஜா மழை பெய்ய வேண்டும் !
எங்கள் மணம் தியாகத்தினால் நிறைய வேண்டும் !