prabahar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : prabahar |
இடம் | : pollachi |
பிறந்த தேதி | : 10-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-May-2014 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 0 |
புத்தகம் என்ற பூஞ்சோலைகாட்டை
ரசிக்கத்தான் சென்றேன்...
ரசிக்க சென்றவன் தொலைந்து தான் போனேன் இக்கணம் வரை...
ரசிப்பவன் ரசித்துக் கொண்டே இருப்பான்
இடைவெளி காணாமல்...
ஏர் பிடித்து களனி அமைப்பவனும் உண்டு...வெள்ளை நிலத்தில்...
மனிதர்களே...
நீங்கள் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை யை விட
இக்காட்டில் ஏராளமான துரோணாச்சாரியர்கள் உண்டு...
புத்தகம் என்ற பூஞ்சோலைகாட்டை
ரசிக்கத்தான் சென்றேன்...
ரசிக்க சென்றவன் தொலைந்து தான் போனேன் இக்கணம் வரை...
ரசிப்பவன் ரசித்துக் கொண்டே இருப்பான்
இடைவெளி காணாமல்...
ஏர் பிடித்து களனி அமைப்பவனும் உண்டு...வெள்ளை நிலத்தில்...
மனிதர்களே...
நீங்கள் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை யை விட
இக்காட்டில் ஏராளமான துரோணாச்சாரியர்கள் உண்டு...
'அ' கற்றுக்கொடுக்க ஆசிரியரிடம்
அழைத்துச் சென்றவன் ,
அகிலம் எனும் கடலில்
நீந்தக் கற்றுக் கொடுத்தவன்,
இவனே..என் சகோதரன்...
அச்சு முறுக்கும்,குறும்புச் சண்டையும்,
என்னை அழைத்து செல்லும் மிதிவண்டி பயணமும் வடுக்களாக மாறிய
பச்சை மரத்தாணி தான் என்றுமே...
கருவாட்டுச் சந்தையில்
ரோஜா விற்பவன் நான்,
கடல் எனும் சமுத்திரத்த சந்தையில்
மீன் விற்பவன் அவன்
இருவரின் மனஇடைவெளியோ இதுதான்..
கவிதையின் தீராக் காதலனனோ நான்,
ஓவியத்தின் தீராக் காதலனோ அவன்
இரண்டையும் பென்(ண்) மை யால் தான் உருவாணதல்லவா!!
அடங்கி கிடக்கும் அமைதி அவன்,
அடங்க மறுக்கும் அமைதி நானே..
இடைவெளியில் ஈருடல் கண்டாலும்
அவன் அழைக்கும் அன்பில் அடங்கிபோவேன்...
நடக்க சொன்ன தந்தை,
கை பிடித்து நடக்க பழக்கிய தமயன்,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை கடந்து,
தமயன் சொல்மிக்க என்று மாறியது என் சித்தம்..
தந்தையை மீறிய அதட்டல்,
தாயை மிஞ்சும் அன்பு,
நண்பணை மீறிய கரம்,
என் சகோதரனே..
தடம் மாறிய பயணங்களில்
தடம் பதிக்க கற்றுக் கொடுத்தவனும் இவனே...
சிறகுள்ள காற்றாக பறந்து,
சிதறும் மழையாக ஓடி,
காலத்தின் கால் பகுதியை கடந்து விட்டாய்,,
உன் கனவுகள் நிறைவேறவும்,
உன் எண்ணம் போல வாழ்க்கை அமையவும் ,
என்றும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்
பிரபாகர்
""ஒத்தி வைப்பு தீர்மானம்""
ஓர் அந்தி சாயும் வேளையில்
மன்னவன் மங்கையிடம்...
ஓவியம் தீட்ட ஆசையடி
உன் கண்ணக்குழி அழகும்,
கயல் விழியும்,காற்றில் பறக்கும்
காதோர முடியுடன் என்றேன்...
கண் மை கலைத்து கூந்தல்
கலைத்து விடுவாய்...
வேண்டாம் என்று மறுத்தாள்....
உன் செந்திருமேனி தொட்டு
கவிதை எழுத ஆசையடி என்றேன்..
எழுத்துப் பிழை ஏராளம்
செய்வாய் வேண்டாம் என்று தடுத்தாள்...
சங்கீதம் கற்க வெகுநாளாய் ஆசையடி
உன் மெல்லிடை மீட்டி என்றேன்...
புதியதோர் ராகம் இயற்றிவிடுவாய்
வேண்டாம் என்று எச்சரித்தாள்...
இறுதியாக,ஒரு பாடலாவது பாட
ஏக்கம் என்றேன்...வேண்டாம்
நீ எங்கு பாடுவாய் நானறிவேன் என்று,
ஐவிரல் கொண்டு திருவாய் உதட்டை
பொத்தி பாதுகாத்தாள்....
மன்னவன் அஸ்திரம் அனைத்தும் வீணான விரக்தியை
இயற்கை அறிந்ததோ!!!
இடியும் மழையும் ஒரு சேர அடிக்க..
அச்சம் கொண்டு அவள் அணைக்க...
அதிகாலையில் ,,
பாழாய் போன இடியும்,மழையும் என்று இயற்கையை
குற்றம் சாற்றி விட்டு எழுந்து நடந்தாள் மங்கை...
ஓத்தி வைப்பு தீர்மானம் தோல்வி யுற்றதின்
மகிழ்ச்சி மன்னவன் முகத்தில்....
இவண்..
பிரபாகர்
அடையாளம் தெரியாதவன் பாசமாக வளர்க்க கொண்டு சென்றாலும் தன்னை அறுக்க செல்வதாக நினைத்து அலறும் ஆடு,
தன்னை வளர்த்தவன் அறுக்க கொண்டுசென்றலும் அமைதியாக செல்கிறது.....
கரணம் நம்பிக்கை
நம்பிக்கை துரோகத்தை புரிந்துகொள்ளும் முன் கொல்லப்படுகிறது நம்பிக்கை