வைஷுவின் வெங்கி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வைஷுவின் வெங்கி
இடம்
பிறந்த தேதி :  06-Jul-1973
பாலினம்
சேர்ந்த நாள்:  10-May-2014
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என் படைப்புகள்
வைஷுவின் வெங்கி செய்திகள்
வைஷுவின் வெங்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2020 1:31 pm

சுயத்தை சிறையிலிட்டு
சுயநினைவு சூன்யமாகி
இருண்ட புத்தகத்தில்
கருப்பு மையான சூன்யம் !

குளத்தில்
கல் எரிந்தாற்போல
குழம்பி வளையும்
குழப்ப மனதின் மருந்து !

சொல் கேளாது
சொல் பேசாது
சிறகு பழு துயரம்
மலை பழு துயரமாய்
வலுத்து பழுக்கும்
மன நோயின் வாயிற்படி !

எழுத்தாளனுக்கும்
சிந்தனையாளனுக்கும்
பிரசவ கூடம் !
தாழ்வு மனக்காரனுக்கும்
பேராசைக்காரனுக்கும்
சவக்குழி !

மேலும்

வைஷுவின் வெங்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2020 3:50 pm

சுயத்தை விற்று
உழைப்பை இரைத்து
உதிரம் வறண்டு
குடும்பத்தை கரையேற்றும்
கட்டு மரம் !

தன்னம்பிக்கை
தைரியம்
தெளிவு- இவை
தோய்ந்த
மூன்றெழுத்து மந்திரம்
தந்தை !

கண்டிப்பு
காட்டிடும்
கண்கள் - முள்ளாய்
அன்பு வழிய
அக்கறை கொஞ்சும்
அழகு மனம் - மலராய் !

அப்பா !
உந்தன்
வியர்வை நாற்றத்தில்
உழைப்பு மணக்குது !
நேர்மை மணக்குது !
புகழும் மணக்குது !

ரேகைகள் தேய்ந்து
மரத்துப் போன
விரல்களின் ஸ்பரிசத்தில்
வாழ்வின்
சோதனைகளை
சொல்லாமல்
உணரவைத்தாய் !

மேலும்

கருத்துகள்

மேலே