தனிமை

சுயத்தை சிறையிலிட்டு
சுயநினைவு சூன்யமாகி
இருண்ட புத்தகத்தில்
கருப்பு மையான சூன்யம் !

குளத்தில்
கல் எரிந்தாற்போல
குழம்பி வளையும்
குழப்ப மனதின் மருந்து !

சொல் கேளாது
சொல் பேசாது
சிறகு பழு துயரம்
மலை பழு துயரமாய்
வலுத்து பழுக்கும்
மன நோயின் வாயிற்படி !

எழுத்தாளனுக்கும்
சிந்தனையாளனுக்கும்
பிரசவ கூடம் !
தாழ்வு மனக்காரனுக்கும்
பேராசைக்காரனுக்கும்
சவக்குழி !

எழுதியவர் : வைஷுவின் வெங்கி (22-Jun-20, 1:31 pm)
சேர்த்தது : வைஷுவின் வெங்கி
Tanglish : thanimai
பார்வை : 132

மேலே