Dec 2014 முக்கிய நிகழ்வுகள் 1 1956 கன்யாகுமரி...
Dec 2014
முக்கிய நிகழ்வுகள்
1 1956 கன்யாகுமரி பகுதி நேசமணி, ம.பொ.சி போன்றோரின் தியாகத்தால் தமிழ் நாட்டுடன் இணைந்தது.
1 1965 பல்லாயிரக்கணக்கான வீரர்களுடன் எல்லைக் காவல் படை ஆரம்பமானது.
1 1963 நாகாலாந்து இந்தியாவுடன் இணைந்தது.
2 1976 ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
4 1934 இந்தியாவில் விமான தபால் சேவை ஆரம்பமானது.
4 1996 அமெரிக்காவின் நாசாவில் "பாத் ஃபைண்டர்' விண்கலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு
விண்ணில் செலுத்தப்பட்டது.
4 2010 பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, டெல்லியில் ஐ.நா. பாதுகாப்பு சபையில்,
"இந்தியா நிரந்தர உறுப்பு நாடாகவேண்டும்" என்றார்.
5 1896 கன்னிமாரா நூலகம் துவக்கப்பட்டது.
6 1889 மதுரை ஏ.வி. மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
6 2006 "நாசா'வின் கண்டுபிடிப்பு! செவ்வாய் கிரகத்தில் நீர்மம் இருக்கிறது!
7 1792 இந்தியாவின் கிழக்கிந்தியக் காவல் துறை ஆரம்பமானது.
7 1946 ஐ.நா.சபையின் சின்னம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது8 1997 நியூசிலாந்தில் முதல்
பெண் பிரதமராக "ஜென்னி சிப்லே' தேர்வானார்.
9 1946 இந்திய அரசியல் அமைப்புக் குழு சச்சிதானந்தா தலைமையில் நடந்தது. அதில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
9 2006 முதன் முதலாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்றார்.
10 2012 அர்ஜென்டினா கால் பந்து வீரர் லயோனெல் மெஸ்ஸி 86 கோல் போட்டு
முன்னர் 85 கோல் போட்ட ஜெர்ட் முல்லரின் சாதனையை முறியடித்தார்.
11 2011 முல்லை பெரியாறு -கேரள அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிராக குமுளியை நோக்கி லட்சக்கணக்கில் பேரணி. இதில் அரசியல் சார்பின்றி முயற்சி.
12 1961 "கோவா-போர்ச்சுகல் காலனி'யை ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா கைப்பற்றியது.
13 2012 தமிழ் நாட்டில் ராமனாதபுரம் பரமக்குடியில் ரூ.920 கோடியில் சூரிய மின் சக்தி பூங்கா அமைக்க ஜெயலலிதா தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தமானது.
15 1988 இந்திய பார்லிமெண்டில் 21லிருந்து 18 வயதாக ஓட்டுரிமை மசோதா சட்டமானது.
17 1903 ரைட் சகோதரர்களின் முயற்சியில் ஆகாய விமானம் முதன் முறையாக வானில்
வெற்றிகரமாக பறந்தது.
17 1946 தமிழ் வளர்ச்சிக் கழகம் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தொடங்கப்பட்டது.
18 1973 ரஷ்யாவின் துணைக்கோள் சந்திரனில் இறங்கியது.
21 1968 அமெரிக்கா அப்போலோ-8, விண்வெளி மூலம் சந்திரனுக்கு மனிதனை அனுப்பிவெற்றி பெற்றது.
22 1851 இந்தியாவில் முதல் சரக்கு ரயில் உத்தராஞ்சலில் துவக்கி வைக்கப்பட்டது.
22 1964 தனஷ்கோடியில் மணிக்கு 250மைல் வேகத்தில் புயல் வீசி நகரை சுருட்டி எறிந்தது. இன்று வரை அது சரியாகவில்லை!
22 2012 ஒடிஸô சந்திப்பூர் கடல் பகுதியில் 2ஆவது நாளாக அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
23 1921 கவி ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் "விஷ்வ பாரதி' என்ற கல்லூரியைத் தொடங்கினார்.
26 2004 சுனாமி! இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் 2லட்சத்திற்கும் மேலானோர் பலியாயினர். நில நடுக்கம் 9.00 ரிக்டர். கோடிக்கணக்கில் சேதம்!
27 1945 சர்வதேச நிதி நிறுவனம் ஆரம்பமானது.
28 1895 முதன் முதலில் லூயி பிரின்ஸ் சகோதரர்களால் முழு சினிமா உருவானது.
28 1885 இந்திய தேசீய காங்கிரஸ் பிறந்தது.
29 1965 இந்தியாவில் "விஜயந்த் டாங்க்' அறிமுகப்படுத்தப்பட்டது.
30 1975 அமெரிக்காவின் விண்கலம் காசினி வியாழனைக் கடந்தது.
நன்றி DN: தொகுப்பு: ராமலிங்கன், சென்னிமலை