எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது சாதி இந்தியா தான் இது சாதிய சமூகம்...

இது சாதி இந்தியா தான்
இது சாதிய சமூகம் தான்
இவர்கள் சாதிய மனிதர்கள் தான்

இவர்களுடைய கௌரவம் சாதி தான்
இவங்க கடவுள் சாதிய கடவுள் தான்
இவங்க கல்வி சாதிய கல்விதான்
இவங்க பெருமை சாதி தான்

சாதி தான் வீடு
சாதி தான் தொழில்
சாதி தான் அடையாளம்
சாதி தான் மாடு
சாதிக்காக தான் இவர்கள்
சாதி தான் பணம்
இது சாதி இந்தியா தான்

பணமில்லாது
உணவில்லாது
பிச்சையெடுப்பினும்
சாதி எனும் திமிர்
இவர்களை விட்டு போகாது...

தன் மலத்திலும்
சாதி பார்த்து
இந்த மலம் என் சாதி
உனை கீழே போடமாட்டேன்
உணவு தட்டில் போட்டு
பாதுகாப்பேன்
என சொல்லமறுப்பதேன் சாதியவாதிகளே...

கனவன் கொலைப்பட்டான்
இவள் வெட்டப்பட்டாள்
சாதிவெறி முன்னின்றது
காதல் உள்ளிருந்து அழுதது

என்னசெய்வாள் அவள்
சமூகம் வேடிக்கையே
பார்த்தது மனிதம் கைகட்டி வேடிக்கைபார்த்தது மனிதன்

யாரும் எதிர்க்கவில்லை
சாதியே அவர்களை ஒன்றினைத்தது
பெண் விடுதலை கதறுகிறது
சுதந்தர நாட்டில் சாதி
சந்தோசமாய் மனிதன் மனதில் ஆழமாய்
வேறூண்றியது

இது சாதி இந்தியா
சாதியாலே இந்தியா
சாதி தான் இந்தியா...

..##சேகுவேரா சுகன்...

பதிவு : cheguevara sugan
நாள் : 20-Sep-18, 12:02 pm

மேலே