வித்தியாசமான போட்டி

அனைவருக்கும் வணக்கம்,

இங்கு நடத்தப்படும் போட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்கள் குறித்து என் மனதில் சில கேள்விகள் எழுந்துள்ளன.

பொதுவாக இலங்கையில் நடத்தப்படும் எந்தவொரு போட்டியிலும் `இருபாலாரும்` அல்லது `அனைவரும்` பங்குபற்றலாம் எனும் வாசகம் காணப்படும். அல்லது பாடசாலை மாணவர்களுக்கென்று தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

ஆனால் இங்கு `திருநங்கை` என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது பாலின அடிப்படையில் பரிசு வழங்கப்படும் எனும் வினோதமான அறிவிப்பு உள்ளது. படைப்பாளி என்ற பதத்துக்குள் பாலின வித்தியாசம் எதற்காக...!? தமிழ் நாட்டில் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பாலின வேறுபாட்டின் அடிப்படையில்தான் பரிசுக்கான சான்றிதழ் கொடுக்கப்படுகின்றதா..!? இப்படி வித்தியாசப்படுத்தி சான்றிதழ் கொடுப்பது அங்கு வழக்கத்தில் உள்ளதா..!?

இதன் தொடர்ச்சியாய் நாளை சாதி அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு சாதியின் பெயர் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு, அந்தந்த சாதிக் குழுவின்/ சங்கத்தின் தலைவரால் பரிசுகள் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஏற்றுக் கொள்வார்களா ..!? சாதி எதற்காக...!?

சந்தேகத்தை தெளிவுபடுத்த கேட்கப்படும் கேள்வி இது. தெரிந்தவர்கள் யாரும் உங்கள் கருத்தை விகற்பமின்றி நேர்மையுடன் சொல்லலாம்.

மிக்க நன்றி,
தோழி துர்க்கா



கேட்டவர் : தோழி துர்க்கா
நாள் : 6-Jul-14, 3:12 pm
0


மேலே