கவனமாக இருப்பீர்களா தோழமையே

வணக்கம். புதிதாய் எழுதுபவர்க்கும் திறமைசாலிகளுக்கும் வரப்பிரசாதம் எழுத்து தளம். எங்கோ குக்கிராமத்தில் இருந்து நாம் சமர்ப்பிக்கும் படைப்பு உலகம் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் செல்லப் படுகிறது. மனம் சிலாகிக்கும் அதே வேளையில் கண்ணை மூடிக் கொண்ட திருட்டுப் பூனைகள் சிலவும் தளத்துக்குள் திடீர் திடீர் என்று முளைத்து தம்பி சந்தோஷ் போன்றவர்களால் குட்டுப் பட்டு போனதும் உண்டு. அதே போல் கீழே தந்துள்ள இரு படைப்புகளையும் பாருங்கள். காபி & பேஸ்ட் பண்ணி என்ன அழகாக ஒரு பூனை கண் மூடிக் காத்திருக்கிறது பாருங்கள்.

படைப்ப : அம்மா ரொம்பக் கெட்டவதான்டா
படைப்பு நாள் : 14-3-2014 - 184200

காபி & பேஸ்ட்
படைப்பு : அம்மா பசிக்குதம்மா
படைப்பு நாள் : 22-8-2014 - 208275

இதில் வேடிக்கை என்னவென்றால் இதே படைப்பு என்னால் புதுமையாக புது முயற்சியாக சத்தியமாக என் சிந்தனையில் தோன்றி என்னால் மார்ச் மாதம் படைக்கப் பட்டு அந்த மாதம் பரிசுக்குத் தேர்வு பட்டியலில் முதலிடம் பெற்று தோழர் கவிஜி அவர்களின் வித்தியாசமான ஒரு கதைக் களம் கொண்ட கதைக்கு பரிசு வழங்கப் பட்டது.
இப்போது நண்பர் இதே கதையை பின் குறிப்புகூட மாறாமல் காபி & பேஸ்ட் செய்து தற்போது இன்றைய தினம் எழுத்து தளத்தின் சிறந்தவைகளில் உள்ளது.
ஒரு சந்தேகம் . இந்த மாதமும் நான் ஏற்கனவே சமர்ப்பித்து ஏற்கனவே சிறந்தவைஎளில் மார்ச் மாதம் இருந்து பரிசுக்குரிய தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றது போல இந்த மாதமும் பரிசுக்குரிய பட்டியலுக்கு வந்து ஒரு வேளை பரிசுக்கு தேர்வானால் !,, . . ? . . . ! . . . ?

கேள்வி : 1- என் நிலமையைப் பார்த்தீர்களா

கேள்வி : 2, தளம் என்ன செய்யும்

கேள்வி : 3. இது தொடர என்ன காரணம்

தயவு செய்து பதில் கூறி எனது வெந்த புண்ணில் மருந்திடுங்கள் தோழமைகளே.



நாள் : 26-Aug-14, 10:22 pm
0


மேலே