ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு திருமணத்திற்கு பிறகும் தொடருமா ?

இத கேள்வின்னு சொல்றத விட ஒரு சந்தேகம்னு சொல்லலாம்
இருந்தாலு நா ஒரு கேள்வியாவே கேட்குற .

எங்களுடைய தோழர்களோட எங்களுக்கு இருக்க நட்பு school life la தொடங்கி வாலிப வயசு வந்தும் பிறகு கல்யாணத்துக்கு அபரமும் வயது போகும் வரைக்கும் அதைய மாறியே நீடிக்கும் ,

ஆனால் தோழிகளுடன் எங்களுக்கு இருக்க நட்பு அவங்க கல்யாணத்திற்கு பிறகும் முதல் இருந்த மாறியே எங்களுக்கு கிடைக்குமா ?
காரணம் சில ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு அவ்வளோ வலிமையா இருக்கும்
ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் இடியில உள்ள நட்ப விட
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு ... ஒரு ஆணுக்கும் பெரும் பாக்கியமாக கருதலாம்
அந்த நட்பு பெண்ணினுடைய கல்யாணத்திற்கு பிறகு கிடைக்காமல் போகும் என்றால்
அதன் வேதனை அளவிட முடியாத தா இருக்கும் ,அவர்கள் இருவருக்குமிடையே உள்ள அந்த நட்பு உண்மையானதாக இருந்தால் அவன் தன் காதலிய பிரிஞ்சத விட ரொம்ப வேதன படுவான்.
என நான் நினைக்கிறேன் .
ok இப்ப நான் மேல கேட்ட கேள்விக்கு ஒரு நல்ல பதில் விளக்கமாக எனக்கு கிடைக்குமென காத்திருக்கிறேன் நண்பர்களே.

அன்புடன்
ஏனோக் நெஹும்



கேட்டவர் : Enoch Nechum
நாள் : 23-Oct-14, 12:36 pm
0


மேலே