எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
ஐந்திலிருந்து பத்து கிலோ இருக்கும்
அந்த மயில் முருகனைத் தாங்குது
முன்னூறு கிராம் எடை இருக்கும்
மூஞ்சூறு எலி
முத்தி விநாயகனைத் தாங்குது.
அட அண்டக்காக்கை
அது கூட சனியைத் தாங்குது
எல்லாத்துக்கும் மேலாய்
சின்னத் தாமரைப்பூ
வண்ணக் கலைவாணியைத் தாங்குது
பாழாப்போன
இந்த வேலைவாய்ப்பு
அலுவலகம் மட்டும்
என்னைத் தாங்க
ஏன் மறுக்குது .?
சுசீந்திரன் .