அன்று போல் இன்று மாறுமா?

அன்றைய காலம் உறவுகள் சூழ விடுமுறை நாட்கள் இனிதே கழிந்தது பெரியவர் ,சிறியவர் அனைவருக்கும் . ஆனால்,இன்றைய காலம் விடுமுறையும் கொடுமுறையாய் மாறி விட்டது .
கடமைக்கு விடுமுறையை கொண்டாடி உறவுகளை தேடாமலும் , தேடி வந்தாலும் நின்று கவனிக்க நேரம் போதாமலும் உறவுகள் வந்த சுவடே அடியோடு மறந்துவிடும் நிலையில் வாழ்கிறோம் . இரத்தப்பற்றை மறந்து நம் பிள்ளைகளும் மத்தப் பற்றோடு வளருகிறது . இவைகளை நினைத்தால் இந்திய நாடு சகோதரத்துவம் என்ற ஒன்றை பேப்பரில் மட்டுமே எழுதி பார்க்கும் சூழ்நிலை உருவாகும் என்பது சந்தேகமற்ற உண்மை. உறவுகளையும், சொந்த பந்தங்களையும் இணைக்க அரசுக்கு வழிவகைகளை சொல்லித்தர வேண்டுமோ? மக்களின் தேவைகளை மாறுவேடம் புனைந்து அறிந்து கொண்ட அரசனையும் அறிந்துள்ளோம் அல்லவா?



உறவுகளின்றி ஒற்றுமை என்பது இல்லை
ஒற்றுமை இல்லையெனில் தாய் தந்தையும்
உதவாதவர்களாய் ஆகும் நிலை தற்போது குறைவு !
வருங்காலங்களில் இவை எண்ணிக்கையை மீறும் !



கேட்டவர் : PJANSIRANI
நாள் : 22-Nov-15, 9:25 pm
0


மேலே