வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..! வீழ்ந்தாலும் படம்

வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை
வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..!

வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால்
குளிரடையட்டும்....
எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில்
இளைப்பாறட்டும்....

வாழும் வரை போராட்டமல்ல - இங்கு
வாழ்வதே போராட்டம் தான்.... 
களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு
கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்....... 

கரம்தனைக் கொண்டு
சிரம்தனை உயர்த்தி 
முட்டி மோதிடு......
சிகரம் தொடவதில் சிரமமிருக்காது...

துளியேனும் அஞ்சிடாமல் 
உளி கொண்டுனை செதுக்கிடு...
உலகம் உன்னை வணங்கும் படியாக...

                                 கவிஞர். ஆபா

வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..! வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால் குளிரடையட்டும்.... எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில் இளைப்பாறட்டும்.... வாழும் வரை போராட்டமல்ல - இங்கு வாழ்வதே போராட்டம் தான்.... களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்....... கரம்தனைக் கொண்டு சிரம்தனை உயர்த்தி முட்டி மோதிடு...... சிகரம் தொடவதில் சிரமமிருக்காது... துளியேனும் அஞ்சிடாமல் உளி கொண்டுனை செதுக்கிடு... உலகம் உன்னை வணங்கும் படியாக... கவிஞர். ஆபா

Close (X)


மேலே