யாருக்கு அந்த இடம்..... கடமைகளுக்கு இடையே கனவுகளைச் சுமக்கும் படம்
யாருக்கு அந்த இடம்..... கடமைகளுக்கு இடையே கனவுகளைச் சுமக்கும் கன்னியான(முதிர்) என்னை கரம்பிடக்கும் காளையவன் யாரோ?.. குடும்ப பாரம் சுமந்ததினால் கூடிப்போன அகவையைக் குறித்து கேலி செய்யும் பொறுப்பானவர்களின் வாயை அடைக்கும் வசந்தராஜா யாரோ?.. தந்தையின் பொறுப்பின்மையாலும் தமையனின் முதிர்வின்மையாலும் பொறுப்பெடுத்த குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் - என் ராஜாதி ராஜா யாரோ?.. தட்சிணை பெற்று தரிசணமளிக்கும் சாமிகள் மத்தியில் (வர) தட்சிணையின்றி எனக்கு வாழ்வளிக்கும் - என் குலசாமி யாரோ?.. கவிஞர்.ஆபா