விதவிதமாக பொட்டிட்டு மகிழ வேண்டியவளை விதவை என்றுசொல்லி மூலையில் படம்
விதவிதமாக பொட்டிட்டு மகிழ வேண்டியவளை விதவை என்றுசொல்லி மூலையில் வைத்தோம்..! சரசரமாக பூச்சூடி அழகு பார்ப்பவளை சங்கடத்தில் ஆழ்த்தி ஒதுக்கி வைத்தோம்..! கலர்கலராய் பட்டுடுத்தி பரவசப்பட வேண்டியவளை சாஸ்த்திர சாக்கடையால் தள்ளி வைத்தோம்..! மங்கள நிகழ்ச்சியில் மனம் குதூகலிக்க வேண்டியவளை மனசாட்சியின்றி வீட்டில் முடக்கி வைத்தோம்..! 'பெண்ணியம் காப்போம்' என்பதை பெயரளவில் கொண்டிருக்கும் பிழை கொண்ட மானிடமே! இனியேனும்...... விதவை - க்கு பொட்டிட்டு அவளை நல்ல விதம் - வை(ப்போம்) ..! கவிஞர் . ஆபா