தமிழியக்கம் - பாடகர்

நாயும் வயிற் ரை வளர்க்கும்;
வாய்ச்சோற்றைப் பெரிதென்று
நாட லாமோ?

போய்உங்கள் செந்தமிழின்
பெருமையினைப் புதைப்பீரோ
பாட கர்காள்!

தோயுந்தேன் நிகர் தமிழாற்
பாடாமே தெலுங்கிசையைச்
சொல்லிப் பிச்சை

ஈயுங்கள் என்பீரோ?
மனிதரைப்போல் இருக்கின்றீர்
என்ன வாழ்வு!

செந்தமிழில் இசைப்பாடல்
இல்லையெனச் செப்புகின்றீர்
மான மின்றிப்!

பைந்தமிழில் இசையின்றேல்
பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை
மாய்த்த லன்றி

எந்தமிழில் இசையில்லை,
எந்தாய்க்கே உடையில்லை
என்ப துண்டோ?

உந்தமிழை அறிவீரோ
தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட் கெல்லாம்?

வெளியினிலே சொல்வதெனில்
உம்நிலைமை வெட்கக்கே-
டன்றோ? நீவீர்

கிளிபோலச் சொல்வதன்றித்
தமிழ் நூற்கள் ஆராய்ந்து
கிழித்தி ட்டீரோ.

புளி என்றால் புலியென்றே
உச்சரிக்கும் புலியீரே
புளுக வேண்டாம்

துளியறிவும் தமிழ்மொழியில்
உள்ளதுவோ பாடகர்க்குச்
சொல்வீர் மெய்யாய்!

தமிழ்மகளாய்ப் பிறந்தவளும்
தமிழ்ப்பகைவன் தனைப்புணர்ந்து
தமிழ்பா டாமல்

சுமக்கரிய தூற்றுதலைச்
சுமப்பதுவும் நன்றேயோ?
பார்ப்ப னத்தி

நமக்குரிய தமிழ்காக்க
ஒப்பாமை நன்றறியும்
இந்த நாடு!

தமிழ்நாட்டுப் பாடகரே!
தமிழ்பாடித் தமிழ்மானம்
காப்பீர் நன்றே.

தமிழ் மொழியில் தமிழ்ப்பாடல்
மிகவுண்டு தமிழ்க்கவிஞர்
பல்லோர் உள்ளார்

உமைத்தாழ்வு படுத்தாதீர்
பார்ப்பான் சொல் கேட்டபடி
உயிர்வா ழாதீர்!

உமை விலக்கிப் பணக்காரன்
உடன்சேர்ந்து நலம்கொள்ளும்
உளவன் பார்ப்பான்!

சிமிழ்க்காமல் விழித்திடுங்கள்
பார்ப்பானை நம்பாதீர்
திறமை கொள்வீர்.


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:46 pm)
பார்வை : 138


மேலே