ஆய்தக் குறுக்கம்

(Aaithak Kurukkam)

ஆய்தக் குறுக்கம்

ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம் (ஆய்தம் அஃகும்)

ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் ஆகும்.

உதாரணம்

முள் + தீது = மு ஃ டீது

மேற்காணும் உதாரணத்தில் நிலைமொழியில் தனிக் குறிலின் கீழ் வரும் 'ளகரம்' 'தகர' முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் ஆகும்.மேலே