மகரக் குறுக்கம்

(Makarak Kurukkam)

மகரக் குறுக்கம்

மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும்.

உதாரணம்

வரும் வண்டி

இங்கே நிலைமொழியீற்றில் 'ம' மகரமும் வருமொழி முதலில் 'வ' வகரமும் வந்துள்ளது. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

"செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும்" - (தொல். 51)

செய்யுளின் இடையில் 'போன்ம்' - வென்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என

செய்யுள் இறுதியில் 'போலும்' - முயக்கமும், தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.

பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் 'னகரமும்' 'மகரமும்' ஒன்றாகி 'போன்ம்' என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.



மேலே