ஒளி வேண்டுமா? இருள் வேண்டுமா?

உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா?
இருள் வேண்டுமா? (உருண்டோடும்)

திருந்தாத தேகம்
இருந்தென்ன லாபம்
இது போதுமா?
இன்னும் வேண்டுமா?
ஓய்... ஓய்... ஓய்.... (உருண்டோடும்)

விரும்பாத போதும்
விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா?
விஷம் வேண்டுமா? (உருண்டோடும்)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (18-Mar-11, 11:47 pm)
பார்வை : 106


மேலே